Wednesday, December 30, 2020

Today News செய்திகள் 30.12.2020 | TPC

Today News 30.12.2020 | TPC


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு.நாளையுடன் முடியவிருந்த நிலையில் பிப்.28 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது மத்திய நிதியமைச்சகம்.

-----

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

2022 ஜனவரி 14-ம் தேதி வரை பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் கடந்த 2018 ஜனவரி 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

-----

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு.

உண்மை தான் வெல்லும், ஸ்டாலினின் பொய் அறிக்கை எடுபடாது - முதலமைச்சர் பழனிசாமி.

அதிமுகவில் சாமானியர் கூட முதல்வராக முடியும்.

புயலை விட வேகமாக செயல்பட்டு, சாதித்து காட்டியது அதிமுக அரசு.

தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு பணி மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது -திருச்சி அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

-----

தமது சொந்த ஊரான, பரமக்குடியில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்:

ஏழ்மைக்கு எதிரான குரல் என்னுடையது அந்த குரல் உங்களுடன் இணையும்.

மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள் - கமல்.

-----

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 

41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு பக்தர்ளுக்கு அனுமதி கிடையாது.

நாளை முதல் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

-----

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு.

பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் இரு கோரிக்கைகள் ஏற்பு என மத்திய வேளாண் அமைச்சர் தகவல்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு.

-----

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என நாளை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு உறுதி.

-----

TNPSC- தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இன்று  (30.12.2020) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு.

விடை தெரியாத கேள்விகளுக்கு "E" கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.

விடைத்தாளில் கைரேகை கட்டாயம்.

இரு இடங்களில் கையெழுத்தும் இட வேண்டும்.

-----

கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் வேத மந்திரங்கள் முழங்க திருமணம். மரங்களுக்கு வேட்டி, சேலை அணிவித்து தாலி கட்டி நடத்தபட்ட  திருமணத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

-----

தமிழகத்தில் 75 80% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்க வாய்ப்பு.

100% இருக்கைக்கு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தார்.

-----

திருச்சி அருகே முசிறி-நாமக்கல் இடையே நான்கு வழி சாலை அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

-----

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியது

-----

SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு ;  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

-----

"நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது, சினிமா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி" - நடிகர் தனுஷ்

-----

ஸ்ரீரங்கம் அரங்கநாத அவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 6ம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் கிருஷ்ணர் கொண்டை, இரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம், மஹாலக்ஷ்மி பதக்கம், காசு மாலை மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

-----

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும்.

விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு.

-----

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் தாயார் மனு.

கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தாயார் விஜயா கோரிக்கை.

-----

நட்சத்திர ஓட்டல்கள் உட்பட அனைத்துவித உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை - சென்னை காவல்துறை.

--

புத்தாண்டையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு செல்லவோ கடலில் குளிக்கவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

-----

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,800 க்கு விற்பனை.

-----

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அமெரிக்க துணை அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி கமலா ஹாரிஸ் போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது.

-----

Tuesday, December 29, 2020

Today News செய்திகள் 28.12.2020 | TPC

Today News 28.12.2020 | TPC

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமானார்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமானார்.

ஓராண்டுக்கும் மேலாக உடல்நலம் குன்றி இருந்த கரீமா பேகம்,  இன்று காலை உயிரிழந்தார். 2020ல் எத்தனையோ இழப்புகள்... ஏ.ஆர்.ரகுமானுக்கு இது பேரிழப்பு.

தன் பேட்டிகளிலும், மேடை பேச்சுகளிலும், தன் தாய் குறித்து ஏதேனும் ஒரு இடத்தில் பேசி விடுவார் ஏ.ஆர்.ரகுமான்.

-----

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

-----

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1.19 கோடி பணம், 1.8 கிலோ தங்கம், 5.2 கிலோ வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளன - கோவில் நிர்வாகம்.

-----

கூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு

-----

ஒன் எலக்ட்ரிக் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் KRIDN இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

இந்த பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறனுள்ளது. விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் பேட்டரியை ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் வண்டி 80 முதல் 110 கிலோமீட்டர் வரை ஓடும்.

இந்த வாகனங்களை வழங்கும் பணி ஐதராபாத்திலும் பெங்களூரிலும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கேரளத்திலும் வாகனங்களை வழங்கும் பணி ஜனவரியில் தொடங்குகிறது. 

-----

"வெற்றிநடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு

நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி வேலூர், 

துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் - அதிமுக தலைமை கழகம்.

-----

தமிழ்நாட்டில், புதிதாக 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழந்தனர். 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது. பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது .

சென்னையில் 285 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 867 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

-----

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க  அனுமதி; பார்களில் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்! - தமிழக அரசு.

உள்ளே செல்ல மற்றும் வெளியே வர என பார்களில் இரண்டு வழிகள் ஏற்படுத்த வேண்டும், முகக்கவசம் கட்டாயம், சானிடைசர், வெப்ப பரிசோதனை என பல்வேறு நிபந்தனைகள் வெளியீடு

-----

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

-----

மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் இருந்து கட்டு கட்டாக புதிய பாட புத்தகங்கள் பறிமுதல். 

இரும்பு கடை வியாபாரி கைது - மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை.

-----

ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது - திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம்.

கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இது.

முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு -மாஸ்டர் படத்துக்கு 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக் கோரிக்கை.

-----

பாக்ஸிங் டே டெஸ்ட் : 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறல்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வேட் 40, மர்னஸ் 28 ரன்கள் சேர்ப்பு.

2வது இன்னிங்சில் இந்திய அணி 326 ரன்கள் சேர்த்தனர்.

-----

மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும் - ரஜினிகாந்துக்கு முதலில் உடல்நலம்தான் முக்கியம். பின்னர்தான் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என நம்புகிறேன்.

பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று வரை அனைத்தையும் பெற தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

- கமல்.

-----

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்பு.

-----

யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறினால் போலியாக அனுப்பப்படும் SMS களை மட்டும்  பார்த்து ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கை பரிசோதித்து கொள்ளவும்.

-----

சொந்த வாகனத்தை, வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் குடும்பத்தார்களை தவிர, அதாவது தாய் தந்தையர், பிள்ளைகள், சகோதர சகோதரிகளைத் தவிர யார் எடுத்துச் சென்றாலும் கிரிமினல் குற்றம்.

- கேரள போலீஸ்!

-----

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது.

-----

Saturday, December 26, 2020

Today News செய்திகள் 26.12.2020 | TPC

Today News 26.12.2020 | TPC

‘சுனாமி’ என்ற ஆழிப் பேரலை தாண்டவமாடி விட்டு போன நாளின்று!

மறக்க முடியுமா? கடந்த 2004-ல் இதே நாளில் தான், கடல் மாதாவின் ஆக்ரோஷத்தை ‘சுனாமி‘ என்ற பெயரில் தெற்காசிய கண்டம் நேரில் அறிந்தது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களை சுனாமி பேரலை தாக்கி சுமார் 1000 பேர்களை பலி கொண்ட 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து கடற்கரை கிராமங்களிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமியில் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்

உடைமை இழந்தோரின் உரிமை காப்போம் - சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் - ஸ்டாலின்

-----

ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவிப்பு

வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த காஞ்சிபுரம் கோயிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் நிலம் மீட்பு: இந்து அறநிலையத்துறை அதிரடி

-----

வரும் சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்பவர்கள் மட்டுமே அஇஅதிமுக கூட்டணியில் தொடர முடியும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

-----

தமிழக முதல்வர் அறிவித்த தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி இன்று நடைபெற்றது.

-----

தோழர் சுப.வீ அவர்களின் அறிவிப்பு:

கொரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு வாரங்களுக்கு என்னிடமிருந்து செய்தி எதுவும் வராது. நண்பர்கள் கலங்க வேண்டாம். விரைவில் மீண்டு வருவேன். தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்திட வேண்டுகிறேன். என் உல்நலம் குறித்து நானே அவ்வப்போது பதிவிடுகின்றேன்.

-----

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது-ஹைதராபாத் தனியார் மருத்துவமனை தகவல்.

ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும்.

பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை - மருத்துவமனை.

-----

முதல்வர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் -பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்

-----

ஓட்டுனர்கள் இல்லாமல் தானியங்கி முறையில் செயல்படும் மெட்ரோ ரயில் சேவை:

பிரதமர் திரு.நரேந்திர மோடி டிச.28-ம் தேதி  டெல்லியில் தொடங்கி வைக்கிறார்!!

-----

வட சென்னையில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக மூத்த அதிகாரி தலைமையில் குழு அமைத்து, மாசு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு!

-----

வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு.

12-ம் வகுப்பு மதிப்பெண் தடையாக இருக்காது.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை.

மத்திய கல்வி அமைச்சகம்.

-----

ஜம்மு-காஷ்மீரில், லஷ்கரின் நிழல் இயக்கமாக செயல்பட்டு வந்த 2 தீவிரவாதிகள் கைது

-----

புத்தாண்டு நள்ளிரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உடனே சிறை

குடும்பத்துடன் தேவாலயங்களுக்கு, கோவில்களுக்கு செல்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் - சென்னை மாநகர காவல்துறை.

-----

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியது.

-----

மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு விற்பனை - ரூ.161 கோடிக்கு விற்பனை என தகவல்.

-----

31 நாட்களை எட்டிய விவசாயிகளின் தொடர் போராட்டம்.: ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி இழப்பு என மத்திய அரசு தகவல்.

-----

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 

16-ந் தேதி முதல் பூஜைகள் நடந்து வரும் நிலையில் மண்டல பூஜை நிறைவு சிறப்பு வழிபாடு இன்று நடக்கிறது.

-----

Friday, December 25, 2020

Today News செய்திகள் 25.12.2020 | TPC

Today News 25.12.2020 | TPC


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.-----

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்க தேர் வீதி உலா.

அதிகாலை 4.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்குப் பின் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தங்க ரதத்தை பெண் பக்தர்களே இழுத்துச் செல்வது வழக்கம் என்ற நிலையில், தேவஸ்தான பெண் ஊழியர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு நோய்தொற்று பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர்.

நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர்.

-----

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு.

இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டப்படுகிறது. 

தேவமைந்தன் பிறப்பை ஒட்டி தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

2021 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

-----

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.

நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர், வளமான இந்தியாவை அமைப்பதற்கான, வாஜ்பாயின் முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும் - பிரதமர்.

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

-----

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் இயங்க தேவைப்படும் மின்சாரத்தை துண்டித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் விவசாயிகள்.

-----

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்.

1027 புதுத் தொற்றாளிகள்.  இதில் 292 சென்னைவாசிகள்.  65,142 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

கோவிட் 19 தடுப்பூசி வெளியிடுவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு : 4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை

-----

பழனி முருகன் கோவிலில் வரும் 28-12-2020 முதல்  ரோப் கார் செயல்படும் என பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது .பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புக் செய்தவர்கள் தகுந்த ஆதாரத்தை காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

-----

கொரோனா தொற்று இல்லை. சளி, காய்ச்சல் என்று இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.  நலமாக உள்ளேன். - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தகவல்.

-----

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி உடன் பிரதமர் உரையாடல்:

சென்னையில் தண்ணீர் குறைவாக கிடைக்கிறது விவசாயம் எவ்வாறு செய்கிறீர்கள் என பிரதமர் கேள்வி

கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி சொட்டு நீர் பாசனம் மூலமாக விவசாயம் செய்வதாக பதில்

தோட்டகலை துறை மூலமாக 3 ஏக்கர் பரப்பளவிற்கு 1 லட்சத்து 33ஆயிரம் மதிப்பில் 100 சதவீத மாணியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்தார்கள்.

இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு 40 ஆயிரம் லாபம் கிடைத்த நிலையில் சொட்டு நீர் பாசனம் மூலம் இந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் லாபம் கிடைத்ததாக கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி பதில்.

-----

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீயால் 3000 ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பல்.

-----

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.

ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் வந்ததை மருத்துவமனை சுட்டிக்காட்டியுள்ளது.

-----

மு.க.அழகிரி அழைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ல் மதுரை வர வேண்டும்.

பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை.

-----

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்பு

ரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோலி பேறுகால விடுப்பில் சென்றுள்ள நிலையில், அஜின்க்யா ரகானே கேப்டனாக விளையாடுகிறார் - பிசிசிஐ

-----

கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு :  அமைச்சர் செல்லூர் ராஜூ.

-----

ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

-----

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் 2,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

-----

2021 ஹஜ், உம்ரா புனித பயணம் விண்ணப்பிக்க ரூ.300 போதும் : இந்திய ஹஜ் அசோஷியேசன் அறிவிப்பு

-----

Thursday, December 24, 2020

Today News செய்திகள் 24.12.2020 | TPC

Today News 24.12.2020 | TPC


தினமும் நியூஸ் உங்களுக்காக..!

அரசுப் பள்ளிகள், அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் +2ஆம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், டேப் வாங்குவதற்காக தலா 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல்போன் வாங்கிக் கொள்ளலாம். மூன்று வாரங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகவே பணம் அனுப்பப்படும். அவர்களுக்கு தேவையான ஸ்மார்ட்போன் அல்லது டேப் வாங்கிக்கொள்ளலாம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

-----

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பால்வளத்துறை ஆணையராக நந்தகோபால் நியமனம், மாநில திட்ட கூடுதல் இயக்குனராக அமிர்த ஜோதி நியமனம்.

வேலை வாய்ப்புத்துறை இணை செயலராக கற்பகம் நியமனம்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

-----

அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு - தமிழக அரசு.

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை.

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.

கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்.

-----

கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்:

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறையினர் அடங்கிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைகளை ஏற்று அரசு முடிவு.

-----

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 25.12. 20

1035 புதுத் தொற்றாளிகள்

70,620 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

1120 பேஷண்டுகள் டிஸ்சார்ஜான நிலையில் 12 பேர் பலி.

ஆக மொத்தம் 8,11,115 தொற்றாளிகள், 7,89,862 டிஸ்சார்ஜ் & 12,036 மரணங்கள்.

-----

புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு .

டிச. 28-ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகை.

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவாக வழங்கப்படும் - தமிழக அரசு.

-----

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு.

-----

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல்.

2022ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படும்.

புதிதாக சேர்க்கப்படும் அணிகளையும் சேர்த்து 2022ஐபிஎல்லில் 10அணிகள் பங்கேற்கும் - பிசிசிஐ.

-----

கொரோனா தடுப்பு விதிகளுடன் திருநள்ளாறுவில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.

டிச.27 முதல் பிப்.2-ம் தேதி வரை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

-----

274 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல அனுமதி.

-----

ரயில்வே எச்சரிக்கை:-

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறி வங்கிக் கணக்கு விவரங்களை யாராவது போன் மூலம் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

-----

Tuesday, December 22, 2020

Today News செய்திகள் 22.12.2020 | TPC

Today News 22.12.2020 | TPC


ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்:

ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் - தமிழக அரசு.

பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

எந்த காரணத்தைக் கொண்டும் ரூ.2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

விடுபட்ட, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜன.13-ம் தேதியில் பரிசுத்தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க வேண்டும் - தமிழக அரசு.

(அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு 

கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு 

வழங்கப்படுகிறது. ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.)

-----

சரக்கு ரயில் துவங்கப்பட்டு இன்றுடன் (22ம் தேதி) 169 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 

1851ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தான் இந்தியாவில் முதன்முதலில் சரக்கு ரயில் துவங்கப்பட்டது. 

தற்போதைய உத்தர்காண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரான் கலியார் எனும் இடத்திற்கு முதன்முதலாக இந்த சரக்கு ரயில் இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-----

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,708,149 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 77,681,288 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54,533,935 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,112 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-----

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து மனு.

தமிழக அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம் – ஸ்டாலின்.

-----

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பயின்று தற்பொழுது தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு போராட்டம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது அக்கறை இல்லை திமுக இந்தக் காலத்திலும் மக்களை சந்திக்க பயந்ததில்லை கிராமங்கள்தோறும் மக்களை நான் சந்தித்து வருகிறேன்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த பின் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் பேட்டியின்போது தகவல்.

-----

இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''திட்டமிட்ட தேதியில் 2020 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு நடைபெறும். இனி தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 140 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

-----

தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் - உமேஷ் சின்ஹா.

-----

புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி.

கடற்கரை சாலையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம் - நாராயணசாமி.

-----

பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவரான தனது புகைப்படங்களை தவிர வேறு யார் புகைப்படங்களும் திமுக சுவரொட்டிகளில், பதகைகளில் இடம்பெறக் கூடாது என கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் திமுக தலைவர்  ஸ்டாலின்.

-----

Today News செய்திகள் 21.12.2020 | TPC

Today News 21.12.2020 | TPC

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு பிறந்தநாள்: 

மக்களுக்கு பணியாற்றிட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.

-----

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு.

2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதன் மூலம் பணப்பலன்கள் பெற முடியும் - தமிழக அரசு.

-----

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

--

சென்னை மதுரவாயில் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் பொங்கல் வரை 50% கட்டணம் வசூலிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 50% சுங்கக்கட்டணம் வசூலை பொங்கல் வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-----

டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து குஷ்பூ-வுக்கு சரியான புரிதல் இல்லை: கமல்ஹாசன்

-----

பிரிட்டனில் புதியவகை கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஒருவாரம் தடை விதித்து துருக்கி, சவுதி அரேபிய நாடுகள் அறிவித்துள்ளன.

-----

தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை:

தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார பராமரிப்பு பணி உத்தரவு ரத்து

சென்னையில் 2 துணை மின் நிலையங்கள் உட்பட 5 நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விட்ட உத்தரவு ரத்து

-----

அன்பார்ந்த செவிலியர்களுக்கு, 

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் புற ஆதார முறையில் (Outsourcing) பணியமர்த்தப்பட உள்ளனர். 

இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஒரு மாஃபியா கும்பல் இப்பணியிடங்களை நிரந்தர அரசு வேலை என்றும், அந்த பணியிடங்களுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

எனவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. 

புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். 

இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே. 

எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. 

இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் (R.No: 96109/UHC/S2/2020 Office of the DPH, Chennai    Dated: 15.12.2020) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்கள் மார்ச் 2021வரை மட்டுமே என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே நிரந்தரமற்ற, நிச்சயதன்மையற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

மேலும், தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில்  பணிபுரிய விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

இந்த பணிக்கு யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால் கீழ்க்கண்ட முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும். 

இயக்குனர், 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தேனாம்பேட்டை, சென்னை. 

Ph: 044 - 24320802 (EXTN - 203)

-----

Monday, December 14, 2020

Today News செய்திகள் 14.12.2020 | TPC

Today News 14.12.2020 | TPC


தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார்.


 

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

-----

அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

-----

பட்டாபிராம் அருகே திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் கார்த்திக் என்பவரின் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதுபேருந்து மோதியதில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

கார்த்திக் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்துக்கு தீ வைத்தனர்.

பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசம் - போலீசார் விசாரணை.

-----

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு.

புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு.

-----

சுற்றுலா தலங்களின் ஒன்றான மாமல்லபுரத்திலும் பொதுமக்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்-தமிழக அரசு.

-----

திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிறவிக் குறைபாடுகள் மற்றும் இருதய பிரச்சனைகள் உடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பொன்னையா திறந்து வைத்தார்

-----

எல்லை தாண்டி வந்ததாக 15க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு:

மீனவர்களை பிடித்து காங்கேசன் முகாமுக்கு அழைத்துச் சென்றனர், இலங்கை கடற்படையினர்.

3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

-----

இன்று மாலை ஜிமெயில், யூடியூப் போன்ற கூகுள் சார்ந்த தளங்கள் அனைத்தும் உலகளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது கூகுள், யூடியூப் மற்றும் ஜி மெயில்.

-----

கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது

பகைவனுக்கு அருள்வாய் எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

-----

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

-----

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய்க்கு குறைந்து 37 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 627 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம்  வெள்ளியின் விலை 30 காசு குறைந்து 67 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

-----

பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சா, மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிப்பது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தவிர்த்த படிப்புக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

-----

சென்னை ஐஐடியில் 14 நாட்களில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுள்ளது.

மாணவர் விடுதி மற்றும் உணவகம் மூலம் பரவியதால் விடுதியும் உணவகமும் மூடல்

-----

உணவு உட்கொள்ளும் இடத்தில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியம் வேண்டாம் – ராதாகிருஷ்ணன்.

-----

தமிழ்நாட்டில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது

இந்த திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் விரைவில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.

 

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 - 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்.

-----

திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி திங்கட்கிழமை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

(இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.)

-----

Sunday, December 13, 2020

Today News செய்திகள் 13.12.2020 | TPC

 Today News 13.12.2020 | TPC

நாளை முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி.

-----

2021-22-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.

-----

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும்.  ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிகட்டு, மே மாத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு, இதற்கு நான் தயாராகிவிட்டேன் - மநீம தலைவர் கமல்ஹாசன்.

-----

எனது பிறந்தநாளில் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூகவலைதளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக உடன்பிறப்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - டிடிவி தினகரன்

-----

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 13, 12, 20

1195 புதுத் தொற்றாளிகள்.

இதில் 340 சென்னைவாசிகள்.

69,143 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

1276 பேஷண்ட்டுகள் டிஸ்சார்ஜான நிலையில் 12 பேர் பலி

ஆக மொத்தம் 7,98,888 தொற்றாளிகள், 7,76,878 டிஸ்சார்ஜ் & 11,895 மரணங்கள்.

-----

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கெஜ்ரிவால் கோரிக்கை.

-----

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும் என்று பா ம க நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

-----

திருப்பத்தூா் மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் வாணியம்பாடியில் விரைவில் தொடங்கப்படும் என தமிழகத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் தெரிவித்தாா்.

-----

சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கடனுதவி திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 58 ஆயிரத்து 626 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

-----

தமிழகத்தில் முதற்கட்டமாக நாளை 600 மினி கிளினிக்குகளை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

-----

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

-----

தற்காலிக பணிக்காலம் நிறைவடையவுள்ள அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

-----

கர்நாடகத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக தொழிலாளர்கள் 125பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

-----

தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

-----

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள 500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணியின்போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

-----

கொரோனாவால் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை,  ஐந்து ரதத்தை பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்த முடியாது; ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். 10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

Saturday, December 12, 2020

Today News செய்திகள் 12.12.2020 | TPC

Today News 12.12.2020 | TPC

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.


நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்..!! - பிரதமர் மோடி வாழ்த்து.

--

ரஜினி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உளமாற வாழ்த்துகிறேன் - எடப்பாடி பழனிசாமி.

--

அதிசய பிறவியியே நீங்கள் வாழ்க பல்லாண்டு காலம்

'"அண்ணன் ரஜினிகாந்த்"" அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -  "நடிகர் செந்தில்"

--

ரஜினிகாந்த் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் - திமுக தலைவர் ஸ்டாலின்.

--

அன்பு சகோத‌ர‌ர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - அமைச்சர் ஜெயக்குமார்.

--

நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.அழகிரி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

-----

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது - சிறுத்தை சிவா

-----

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சிறுநீரக கோளாறு காரணமாக ராஞ்சியில் சிகிச்சை பெற்று வருகிறார் லாலு பிரசாத்.

-----

தாம்பரம் - நாகர்கோவில் இடையே வரும் 16ம் தேதி முதல் வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

-----

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை குழுவில் மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் - ஹரியானா அரசு

-----

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் மட்டும் உண்டியலில் ரூபாய் 65.4 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் மட்டும் 9 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளனர்.

-----

உத்ரகாண்டில் வரும் 15-ஆம் தேதி முதல் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

-----

அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற்று சுமூகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் வேண்டுதல்!

- இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்வீட்

-----

தமிழகம் முழுவதும் 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல்

-----

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இசையமைப்பாளர்  இளையராஜா.

-----

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை.

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது.

-----

நாமக்கல் .நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை  25 காசுகள் உயர்ந்து முட்டை விலை 4.40 காசுகளாக விலை நிர்ணயம். குளிர்காலம் என்பதால் முட்டை நுகர்ச்சி அதிகரிப்பால் விலை உயர்வு

-----

ஆண்டு தோறும் டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) கடைபிடிக்கப்படுகிறது.

-----

வேலூரில் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. பொன்னை, பாலாற்றில் இரு கரையும் தொட்டு ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.

-----

அடுத்த வாரம் முதல் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் - அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தகவல்.

-----

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...