Today News 10.12.2020 | TPC
ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த
4 அவதூறு வழக்குகள் ரத்து.
ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த
கருத்துகள் தொடர்பான வழக்குகள் ரத்து.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை
ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும்- நீதிபதி
கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை
தவிர்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.
-----
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி
பிறந்த தினம் – இன்று.
60 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த
பிறகு. கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும்
இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து
ஓய்வு பெற்ற பிறகு, 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக
ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி!
-----
மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள்
மூலம் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
‘மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை
கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், டிச.21 முதல் 26 வரை அதற்கான விண்ணப்பங்களை
அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து
ஜனவரி 6-ல் இறுதி செய்யப்படும்’
-----
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும்,
பாஜக எம்பியும் ஆன கவுதம் கம்பீர் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததற்காக கம்பீர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது.
-----
டிசம்பர் 13-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை
தொடங்குகிறார் கமல்ஹாசன்.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில்
கமல்ஹாசன் தொடர் பிரசார பயணம்.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம்.
-----
நீட் தேர்வு ஓஎம்ஆர் (OMR Sheet) ஷீட்
மதிப்பெண்ணில் குளறுபடி; விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்க: தேர்வு முகமைக்கு உயர்
நீதிமன்றம் உத்தரவு.
-----
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான
முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 551 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில்
393 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். 158 பேர் பங்கேற்கவில்லை. எம்பிபிஎஸ் படிப்பில்
அரசு கல்லூரிகளில் 42 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 இடங்களும் நிரம்பின.
-----
புதுச்சேரியில் போதை ஊசி விற்ற ஜிப்மர்
மருத்துவர் துரைராஜன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான
மருத்துவர், கஞ்சா பெறுவதற்காக போதை ஊசியை விற்றுள்ளார்.
-----
டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய
கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற
கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இதை இடித்து விட்டு டெல்லியில்
உள்ள சன்சாத் மார்க்கில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல்
நாட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில்
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-----
சர்வதேச ஆயுத இறக்குமதி:-
கடந்த 2019ல் சர்வதேச அளவில் அதிகளவு
ஆயுதங்களை இறக்குமதி செய்ததில், சவூதி அரேபியா முதல் இடத்தையும், இந்தியா இரண்டாவது
இடத்தையும் பிடித்துள்ளது.
-----
முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும்:-
தமிழக அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான
முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
-----
அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்.
நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும்
மாணவர்கள் பங்கேற்கலாம் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
-----
இந்தியா Vs இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் அந்தோணி டி மெல்லோ டிராபிக்கான
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம்
2021 பிப்ரவரி - 5ல் சென்னையில் நடைபெறும்.
-----
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா,
சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல
ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது.
படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி,
இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும்
கலந்து கொண்டனர்.
-----
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான
சாத்திய கூறுகள் குறைவு. பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு
மையம் தகவல்.
-----
No comments:
Post a Comment