Today News 30.12.2020 | TPC
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு.
நாளையுடன் முடியவிருந்த நிலையில் பிப்.28 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது மத்திய நிதியமைச்சகம்.
-----
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2022 ஜனவரி 14-ம் தேதி வரை பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் கடந்த 2018 ஜனவரி 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
-----
அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு.
உண்மை தான் வெல்லும், ஸ்டாலினின் பொய் அறிக்கை எடுபடாது - முதலமைச்சர் பழனிசாமி.
அதிமுகவில் சாமானியர் கூட முதல்வராக முடியும்.
புயலை விட வேகமாக செயல்பட்டு, சாதித்து காட்டியது அதிமுக அரசு.
தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு பணி மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது -திருச்சி அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.
-----
தமது சொந்த ஊரான, பரமக்குடியில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்:
ஏழ்மைக்கு எதிரான குரல் என்னுடையது அந்த குரல் உங்களுடன் இணையும்.
மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள் - கமல்.
-----
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது.
41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு பக்தர்ளுக்கு அனுமதி கிடையாது.
நாளை முதல் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
-----
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு.
பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் இரு கோரிக்கைகள் ஏற்பு என மத்திய வேளாண் அமைச்சர் தகவல்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு.
-----
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என நாளை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு உறுதி.
-----
TNPSC- தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இன்று (30.12.2020) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு.
விடை தெரியாத கேள்விகளுக்கு "E" கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.
விடைத்தாளில் கைரேகை கட்டாயம்.
இரு இடங்களில் கையெழுத்தும் இட வேண்டும்.
-----
கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் வேத மந்திரங்கள் முழங்க திருமணம். மரங்களுக்கு வேட்டி, சேலை அணிவித்து தாலி கட்டி நடத்தபட்ட திருமணத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.
-----
தமிழகத்தில் 75 80% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்க வாய்ப்பு.
100% இருக்கைக்கு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தார்.
-----
திருச்சி அருகே முசிறி-நாமக்கல் இடையே நான்கு வழி சாலை அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி
-----
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியது
-----
SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு ; ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
-----
"நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது, சினிமா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி" - நடிகர் தனுஷ்
-----
ஸ்ரீரங்கம் அரங்கநாத அவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 6ம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் கிருஷ்ணர் கொண்டை,
இரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம், மஹாலக்ஷ்மி பதக்கம், காசு மாலை மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
-----
சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும்.
விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு.
-----
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் தாயார் மனு.
கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தாயார் விஜயா கோரிக்கை.
-----
நட்சத்திர ஓட்டல்கள் உட்பட அனைத்துவித உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை - சென்னை காவல்துறை.
--
புத்தாண்டையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு செல்லவோ கடலில் குளிக்கவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-----
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,800 க்கு விற்பனை.
-----
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அமெரிக்க துணை அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி கமலா ஹாரிஸ் போட்டுக்கொண்டார்.
தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது.
-----
No comments:
Post a Comment