Friday, January 22, 2021

Today News செய்திகள் 22.01.2021 | TPC

Today News 22.01.2021 | TPC


சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள்
பல்வேறு கோயில்களில் அ.ம.மு.க.வினர் வழிபாடு!பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை பெங்களூரு பழைய விமான நிலையம் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற ஆலோசனை!
------

சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தடையில்லா சான்றிதழ் வழங்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
------

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ந்த கொள்ளை!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இன்று காலையில் வங்கி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது 6 பேர் வாடிக்கையாளர்கள்போல் பின் தொடர்ந்துவந்துள்ளனர். வங்கியை திறந்தபிறகு உள்ளே நுழைந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, அலுவலகத்தின் மேனேஜர் உட்பட 6 பேரை கட்டிப்போட்டு, லாக்கரின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
------

கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.
------

சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை.
------

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்; தனி விமானத்தில் மருத்துவமனை விரைந்த குடும்பத்தினர்!
------

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 22.01.21
574 புதுத் தொற்றாளிகள்.
இதில் 155 சென்னைவாசிகள். 
61,922 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது
689 பேஷண்டுகள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 8 பேர் பலி.
ஆக மொத்தம் 8,33,585 தொற்றாளிகள், 8,16,205 டிஸ்சார்ஜ் & 12,307 மரணங்கள்.
------

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்; முதற்கட்டமாக 35 வேட்பாளர்கள் அறிவிப்பு.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் மட்டுமே.

அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் - சீமான்.
------

வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.

கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பேச்சுவார்த்தை நிறைவு.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தல்.
------

இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. மத்தியபிரதேசம், அரியானா, மராட்டியம், சத்தீஷ்கர், இமாச்சலம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
------

சசிகலாவின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு சசிகலா உடலில் 75 சதவீத ஆக்சிஜன் அளவே இருந்தது. சசிகலா தெளிவாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
------

சபரிமலையில் இந்தாண்டு மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 21.17 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வருவாய் குறைந்தது. கடந்தாண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 269 கோடி வருவாய் கிடைத்த நிலையில் தற்போது 92.2 சதவீதம் குறைந்துள்ளது.
------

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.
------

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரை.

கொரோனா தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி.
------

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
------

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,660-க்கும் சவரன் ரூ.37,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கு விற்பனையாகிறது.
------

போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி.
------

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசப் பொதுத்தேர்வு வழிகாட்டி நூல்: ஒடிசாவில் அறிவிப்பு.
------

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் ஜன.28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு:

வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்.
------

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்   -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
------

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்னால்டின் புகழ்பெற்ற டெர்மினேட்டர் படத்தில் வரும், "வாழ வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள்" என்ற வசனத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார்.
------

Thursday, January 21, 2021

Today News செய்திகள் 21.01.2021 | TPC

Today News 21.01.2021 | TPC


பிரபல கிறிஸ்துவ போதகர் பால் தினகரனுக்கு சொந்த நிறுவனத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத வெளிநாட்டு முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் மேலும் 2 நாட்களுக்கு சோதனை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------
அடுத்த மாதம் கல்லூரிகள் திறப்பு?

தமிழகத்தில் முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை திட்டம்.

மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை.
------
நிவர் புயல் பாதிப்பு; ரூ.26.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு. 

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 கோடியும், மாநில நிதியாக ரூ.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
------
புனே: மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தில்தான் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட மருந்துக்களை பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
------
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, மதுராந்தகம் ஏரி சுமார் ரூ.125 கோடியில் விரைவில் புனரமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 5 பொறியாளர்களை அமைத்து நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டன என்றார்.
------
சசிகலா உடல்நிலை குறித்து அறிய டாக்டர் சிவக்குமார் உடன் பெங்களூரு விரைந்தார் டிடிவி தினகரன்.

இளவரசி மகனும் ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஒ-வுமான விவேக்கும் பெங்களூரு சென்றார்.
------
சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

- மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார்.
------
சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா தம்பி திவாகரன் குற்றச்சாட்டு

சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது. சசிகலாவுக்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்.
- திவாகரன்
------
பெங்களூரில் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு: 

சசிகலா உடல் நிலை சீராக உள்ளது.

சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிடி ஸ்கேன் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது.
சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம்.

சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
---
தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து  சமூக இடைவெளி விட்டு சின்னம்மாவுக்கு சரியான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும்.

கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
------
மூன்றே நாள்களில் 2.5 கோடி டவுன்லோடு... - 'சிக்னல்' செயலியின் கிடுகிடு வளர்ச்சி!

கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
------
மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து.
------
மதுபானங்களுக்கு ரசீது வழங்க உத்தரவு:

மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்.

மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
------
தடுப்பூசியை செலுத்தாமல் உடலின் மீது வைத்துப் பொய்யாகப் படம்பிடித்த அதிகாரிகள்.

கர்நாடகத்தின் தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகப் பொய்யாகப் படம்பிடித்துக் கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
------
ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

13 மாவட்டங்களில் உள்ள கிராம பணியாளர்கள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க ஆந்திர அரசு திட்டம்.
------
ராஜா முத்தையா கல்லூரி மூடல்:

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடல்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையான கட்டணம் கேட்டு 43 நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் மூடல். 

மாலை 4 மணிக்குள் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு.
------
திமுக கூட்டணிக்குள் கமலை கொண்டுவர முயற்சிக்கவில்லை. ஆனால், அவர் வந்தால் வரவேற்போம் - கே.எஸ்.அழகிரி
------
விசிக தனி சின்னத்தில்தான் போட்டி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது உறுதி.

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை - திருமாவளவன்.
------
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு.

தனது முதல் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் முடித்து கொண்டு சொந்த கிராமத்திற்கு வருகை.

செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலம்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி இருப்பதால் நடராஜனை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் நடராஜன் உடன் கைகுலுக்கி கொள்வதற்கும் அவருக்கு சால்வை அணிவிக்கவும் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் சின்னம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.
------

Monday, January 18, 2021

Today News செய்திகள் 18.01.2021 | TPC

Today News 18.01.2021 | TPC

தமிழகத்தில் புக்கிங் செய்த 30 நிமிடத்தில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.


பிப்ரவரி 1ம் தேதி முதல் தட்கல் முறையில் சிலிண்டர் டெலிவரி திட்டம்.

இந்தியன் ஆயில் நிறுவனம் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருகிறது.

------

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி:

பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல்.

அரசியல் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

------

மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும்"

“அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" -மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு.

------

தூர்தர்ஷனில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஒளிபரப்ப தடை கோரி வழக்கு:

மனுதாரருக்கு சமஸ்கிருத செய்தி அறிக்கை தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்து கொள்ளலாம்.

அல்லது வேறு சேனலை மாற்றி கொள்ளலாம், இதைவிட முக்கிய பிரச்சினைகள் பல உள்ளன - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து.

------

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி.

------

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - சட்டப் பேரவையில் தீர்மானம்.

சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடிய நிலையில் தீர்மானம் நிறைவேற்றம்.

------

வடகிழக்குப் பருவமழை நாளையுடன் விடைபெறுகிறது - வானிலை மையம்

வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜன.19ஆம் தேதியுடன் விடை பெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்.

20, 21 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

------

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார்.

சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் சுதாகரன் விடுதலையில் தாமதம் என தகவல்.

------

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா அணி சார்பில் சிராஜ் 5 விக்கெட்களையும், தாக்கூர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

------

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்:

மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் - ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை.

------

10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

10, 12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்.

------

“பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் மருத்துவ குழு செல்லும்; மாணவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்யவே மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது!” - பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்.

------

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும்.

ஜன. 4 முதல் 13 வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும்.

------

ஜனவரி 21ல் கலைஞர் தி.மு.க. உதயமாகிறது. மு.க.அழகிரி அதிரடி அறிவிப்பு!

------

இந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை.

------

Wednesday, January 13, 2021

Today News செய்திகள் 13.01.2021 | TPC

Today News 13.01.2021 | TPC

போகிப் பண்டிகை:வழக்கமான உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்; பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகம்!

------

போகிப்பண்டிகையையொட்டி சென்னை விமானநிலைய ஓடுபாதையில் புகை மண்டலம் சூழந்துள்ளதால் சுமாா் 17 விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகி பயணிகள் அவதி.

------

“சேலம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்"-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.15 முதல் ஜன.31 வரை நடத்த அனுமதி.

------

யூ டியூப் சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை-ஆபாசமான வீடியோக்களை நீக்கவும் உத்தரவு.

ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.

ஆபாசமான பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி.

------

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.621 கோடி செலவாகும் என கணக்கீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தகவல்.

கொரோனா பயத்தால் பூத்துகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூடுதல் செலவு.

------

கொரோனா காலத்தில் 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு.

நோய் கட்டுப்பாட்டுக்கு பகுதிக்கு வெளியேயுள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

------

மது அருந்தக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை -  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர்  அலுவலகத்தில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட  9 மாவட்டங்களுக்கு  தடுப்பூசியை அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..

வரும்16ம் தேதி முதல்  இந்தியா முழுவதும் தடுப்பூசி  செலுத்தப்படும் என  மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி Dose உள்ளது.

முதல்கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில் 68,800 தடுப்பூசி புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வந்துள்ளது.

ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போட்ட உடன் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணி விடக்கூடாது -

முதல் டோஸ் போட்ட பின்பு  28 வது நாளில் 2 வது டோஸ் போட வேண்டும், அதனைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

மது உடல் நலத்திற்கு கேடானது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர் தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

தமிழ்நாட்டில் கோவிட் பாதிப்பு  10 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது.

தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.

சமூக வலைகளில் தவறாக பரப்புவார்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

------

சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.

மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.

------

விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.

98 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வரவிரும்புகின்றனர்- அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை.

தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை.

------

வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவுயிட்டதால்ஒரு வாரத்திற்கு ட்ரம்ப்-ன் யூடுப் (YouTube Channel) முடக்கம்.

------

Tuesday, January 12, 2021

Today News செய்திகள் 12.01.2021 | TPC

Today News 12.01.2021 | TPC

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில்ரூ.50.80 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. 

நினைவிடத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றார். 

நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் பணிகளை பார்வையிட்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் வந்தனர்.

------

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன்

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியது.


------

கேரளத்தில் மேலும் 5,507 பேருக்கு கரோனா:

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன்வெளியிட்ட அறிக்கையில்,


இன்று புதிதாக 5,507பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 8,19,766ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 64,556 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

------

கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: முதலில் வெளியாகிறது விஜய் நடித்த மாஸ்டர் படம்

கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 

முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேரளத்தில் கடந்த பத்து மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாளை முதல் கேரளத்தில் திரையரங்குகள் மீண்டும் இயங்கவுள்ளன.

------

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை ஆகிய மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.

------

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இல்லத்தை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இல்லத்தை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை தினக்கூலி ஊழியர்களாக மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

------

சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ரஜினி ஆதரவு அளிக்க மாட்டார்: தமிழருவி மணியன் கருத்து.

------

பறவைக் காய்ச்சலால் நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்: ஒரே வாரத்தில் விலை 90 காசுகள் குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை.

நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 

மீதமுள்ள 2 கோடி முட்டைகள் மாநிலம் முழுவதற்கும், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

------

மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

------

இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம்

வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படும்!

-சீரம் நிறுவனம் தகவல்

------

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

------

அரியலூர் மாவட்டதில் கடந்த இரண்டு நாளாக இடைவிடாத தொடர் மழை பதிவாகிய வண்ணம் உள்ளது.

தற்போது அரியலூர் மாவட்டதில் கரும்பு அறுவடை  பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடர் மழையால் கரும்பு அறுவடை  பணிகள் நடைபெறாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை.

------

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக புகார்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை நடவடிக்கை.

------

பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை.

ஏற்கனவே காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 நாட்களுக்கு தடை விதிப்பு.

------

Monday, January 11, 2021

Today News செய்திகள் 11.01.2021 | TPC

Today News 11.01.2021 | TPC

நிபந்தனைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

பிளக்ஸ், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது - நீதிபதிகள்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான அனுமதி சீட்டு இன்று வழங்கப்படுகிறது.

------

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கம்.

பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோருக்காக ஜன.17 முதல் 19ஆம் தேதி வரை 9,120 பேருந்துகள் இயக்கம்.

------

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கான தடுப்பூசி செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி

------

ஆந்திராவில் மகா சங்கராந்தியை ஒட்டி நடக்கும் மாடு விடும் விழா, சேவல் சண்டை போட்டிகளுக்கு தடை

------

ஜன. 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

ஜன.13ஆம் தேதி வரை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிப்பு -  தமிழக அரசு.

------

முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக நீடிக்கிறது, தேமுதிக முரசு சின்னத்தில் தான் போட்டியிடும் – பிரேமலதா.

------

பொங்கல் ரிலீஸுக்கு மாஸ்டர், ஈஸ்வரன்  ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நிலையில், அரசு, 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சுகாதாரத்துறை தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிச்சு. இதையடுத்து, இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் தற்போது இருக்கும் 50% பார்வையாளர்கள் நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதிக்கு எதிராக வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவது போதாது, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் மீண்டும் 50% அனுமதி அளித்த அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

------

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்: டிரா செய்தது இந்தியா.

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

------

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை:

விவசாயிகள் தொடர்ந்து போராடலாம்-உச்சநீதிமன்றம் அனுமதி.

போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது- உச்சநீதிமன்றம்.

போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.

விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறையால் ஏமாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து.

மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது- நீதிபதிகள் கேள்வி.

சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?

------

அடிமை வாழ்வை அகற்றிட, அறப்போர் நடத்திய தியாகி, கொடி காத்த  திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்த தேசத்தின் விடுதலைக்காக தன் இன்னுயிரையே தந்த அப்பெருமகனின் ஒப்பிட முடியாத தியாகத்தை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து நன்றியோடு வணங்கிடுவோம்! - டிடிவி தினகரன்

------

தென் தமிழகமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ராமநாதபுரம்,விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு.

அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும்- வானிலை மையம்.

------

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296க்கு விற்பனை.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.4662-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

ரஜினிகாந்த் அறிக்கை:

அரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.

“அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்!” 

“நான் அரசியலுக்கு வர வேண்டுமென யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்"

------

குஜராத்தில் 10 மாதங்களுக்கு பின் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

------

Thursday, January 7, 2021

இன்றைய தினம் 07.01.2021

  • எழுத்தாளர் லட்சுமி இன்று நினைவு தினம்.

லட்சுமி (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.


திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்குப் இட்ட பெயர் திரிபுரசுந்தரி.


மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.


பதவிகள் வகித்தாலும் பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே இவருடைய எதிர்பார்ப்பு. இவருடைய எழுத்துக்களில் பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளை தன்னுடைய எழுத்துக்களில் பின்னித் தந்தவர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

  • மெல்லிசை மாமணி (Melody King) வி.குமார் மறைந்த நாளின்று.

இசையமைப்பாளர் வி.குமாரைப் (28-ஜுலை-1934 - 07-ஜனவரி-1996) பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில்  இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள்.


இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம். 28.7.1934-இல் பிறந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்திவந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.

நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.

வி.குமார் 1978-இல் இசையமைத்த ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தில் பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு என்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய நேயர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தே நிமிடங்களில் இவரது மெட்டுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார்.

வி.குமாரின் மனைவி திருமதி.சொர்ணா. இவரும் ஒரு பாடகியாக அறிமுகமாகி வி,குமாருடன் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தவுடன் பாடுவதை நிறுத்தியவர் .

Today News செய்திகள் 07.01.2021 | TPC

Today News 07.01.2021 | TPC

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது.அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி கருத்து. 

வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மன உளைச்சல் அளிக்கிறது - பிரதமர் மோடி.

"வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம்" – ஒபாமா.

------

கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு - விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.

------

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல் செய்தது பள்ளிக்கல்வித்துறை.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

------

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினிரியோ மாரடைப்பால் காலமானார்.

------

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானத்தின் உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக  ரோபோ தொழில்நுட்பத்தை  இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

------

ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

------

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தல்

போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமன்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக பீட்டா அமைப்பு தகவல்.

------

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

------

நாடு முழுவதும் JEE-ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

------

சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

------

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

------

மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

இதே போன்று இமாச்சலப் பிரதேச அரசும் நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

------

நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலி இன்று டிஸ்சார்ஜ்.

------

லஞ்சம் பெற்ற திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதிதாக மனைப்பிரிக்க அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

------

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் -இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

------

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக புகோவ்ஸ்கி 62 ரன்களும், மார்னஸ் 67 ரன்களும் எடுத்தனர்.

------

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

------

Tuesday, January 5, 2021

Today News செய்திகள் 05.01.2021 | TPC

Today News 05.01.2021 | TPC

தை பூச நாள் - இனி அரசு விடுமுறை தினம்.
தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

------

10,11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொது தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளை திறக்க திட்டம்.

பள்ளிகள் திறப்பது குறித்து நாளையே கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

------

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் - தலைமை நீதிபதி அமர்வு வேதனை.

------

எம்.பி. - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்- சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

------

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்து உள்ளதால் மம்தா பேனர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

------

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

------

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

------

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 41 நாட்களாக விவசாயிகள் போராட்டம் குறித்தும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது

------

மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு

------

சென்னையில் தொடர் மழை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

------

இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளிவைத்துள்ளதாக தகவல்.

------

இந்தியாவில் வரும் 13-ம் தேதி (ஜன) - முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

------

தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.

------

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம்.

------

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர் மட்டம் - 46 அடி; நீர் இருப்பு - 45.80 அடியாக உள்ளது.

------

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை.

பறவைக் காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு.

------

Monday, January 4, 2021

Today News செய்திகள் 04.01.2021 | TPC

Today News 04.01.2021 | TPC


அசாமில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாணவிகள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ரூ.100 உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவிச்சிருக்கார்.

------

புதுச்சேரியில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறக்க உயர்க்கல்வித்துறை உத்தரவு.

------

தமிழ்நாடு கொரோனா இன்றைய நிலவரம் 04.01.21

838 புதுத் தொற்றாளிகள்

இதில் 229 சென்னைவாசிகள். 

60,174 பேர்களுக்கு  டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

------

அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

------

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்தக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 10, 12 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்பது இன்றியமையாததாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரிய் கழக உறுப்பினர் கள், பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ளது.

------

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி:

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

------

டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கும் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கலாசார பிணைப்புகளை மேம்படுத்தவும், தமிழ் பாரம்பரியத்தை வெளிக்காட்டவும் இது உதவும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனை.

------

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்?

அரசியல் சண்டையை அரசியல் ரீதியில் சந்திக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 

சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி.

------

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - காஷ்மீரில், உதம்பூர் - ஸ்ரீநகர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

------

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் ரூ.29.06 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் நேற்று வரை 4.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

------

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் 60 பேர் மரணம்.

கடுமையான குளிரை தாங்க முடியாமல் 60 விவசாயிகள் உயிரிழப்பு.

விவசாயிகள் மரணம் குறித்து பாரதிய கிஷான் சங்கம் அறிவிப்பு.

------

காவல்துறை எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்க கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து¸ ஆதார் எண்ணை அளிக்க கோரி¸ பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி (OTP) வரும் என்று கூறி நமது விவரங்கள்¸ வங்கித் தொகை ஆகியவற்றை திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுகொள்கிறது.

------

KGF Chapter II Movie Teaser :-

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது. ஹோம்பாலே யூடியூப் சேனலில் டீஸர் வெளியிடப்படுகிறது.

------

Saturday, January 2, 2021

Today News செய்திகள் 02.01.2021 | TPC

Today News 02.01.2021 | TPC


அஜித், தனுஷ், ஜோதிகாவிற்கு 2020-ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.


தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட திரையுலகினருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

------

வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மின்சார ரயில் சேவை - தெற்கு ரயில்வே  அறிவிப்பு.

------

கர்நாடகாவில் ஹோட்டல்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அரசு அனுமதி.

பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது- கர்நாடக அரசு.

ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம்.

------

நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இடு பொருள் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

புயலால் பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடு பொருள் நிவாரணம் வழங்க உத்தரவு.

வருகிற 7 ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

------

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள் தயாராக உள்ளது.

ஜனவரி 15-ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

------

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ரோகித் சர்மா, ஷிப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

------

ரூ 1750க்கு ஸ்மார்ட் போன் எனக் கூறி பவர் பேங்க் அனுப்பும் மோசடி.

தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மர்ம நபர்கள் கோவிட் 19 காரணமாக தங்கள் நிறுவன ஸ்மார்ட் போன்களை ரூ 1750க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், தபால்கார ரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக்கூறி டுபாக்கூர் பவர்பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. 

கவனம் மக்களே!

------

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்.

------

பாஜக தலைமை வாய்ப்பளித்தால், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் - குஷ்பு

தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? - உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்

2021 சட்டபை தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா : குஷ்பு கேள்வி!

------

பலத்த மழையால் 5,263 கன அடி நீர்வரத்து: பாபநாசம் அணை மீண்டும் நிரம்பியது.

------

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

காஷ்மீர் : புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்.

------

வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி - கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

------

“டெல்லி மட்டும் அல்ல, நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

------

டிஎன்பிஎஸ்சி.யின் குருப்-1 முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது : 66 காலியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,748-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 130 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...