Wednesday, March 17, 2021

Today News செய்திகள் 17.03.2021 | TPC

Today News 17.03.2021 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC


எளிமை, நேர்மை அரசியலில் சாத்தியம் என நம்புகிறோம், இதை யெல்லாம் தமிழகம் அத்தகைய தலைவர்களை கண்டிருக்கிறது என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். நேர்மையான அரசியல் எளிமையானதில்லை, அதை அடைவது கடினம்தான், ஆனால் அது சாத்தியம் என சகாயம் தெரிவித்துள்ளார்.

------

விஜய் சேதுபதி நடிப்பில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் புதிய படம் விஜய் சேதுபதியின் 46வது படமாகும். விஜய் சேதுபதியின் 46வது படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

------

தனியார் மருத்துவ கல்லூரி மேற்படிப்பில் குறைந்த இடம் கிடைத்ததில் அதிகாரிகளின் கூட்டுச்சதி இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேற்படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

------

சென்னை, கோவை உட்பட 20 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.400 கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வேளாண் பொருட்கள் விற்பனை என்று மோசடி செய்து ரூ.100 கோடிக்கு போலி ரசீது தயாரித்துள்ளதாகவும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

------

ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி இளைஞருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணை தொடங்கி 27 நாட்களில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

------

டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமனம், மும்பை காவல்துறை புதிய ஆணையராக ஹேமந்த் நகரல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

------

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து கோவை தங்கம் விலகினார். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோவை தங்கம் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. .மா.கா.லிருந்து விலகிய கோவை தங்கம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

------

ம.நீ.ம. பொருளாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரூ. 8 கோடி பறிமுதல்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பூர், கோவையில் உள்ள சந்திரசேகரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. தமிழக அரசின் மகப்பேறு பை உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்ததாராக சந்திரசேகர் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

------

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். விவசாயிகளின் நலன்களைக் காக்க திரிணாமுல் காங்கிரஸ் பாடுபடுகிறது. மேற்குவங்கத்தின் மேம்பாட்டுக்காக எனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

------

நாட்டுக்கான நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது, மாற்று அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

------

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் நிர்வாக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு வழங்க மடிக்கணினி, பிளாஸ்டிக் வாளிகள் 500-க்கும் மேற்பட்டவைகள் இருப்பதாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

------

சிவகாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கவிதா நகரில் பூச்சட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் பதுக்கியது தொடர்பாக 2 பேரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

------

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், திமுக தலைவர் மு..ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு..ஸ்டாலின் கருத்து தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறி உள்ளனர்.

------

தமிழகத்தில் தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், மக்களின் செல்வங்கள் அனைத்தும் சூறையாடப்படும் என டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

------

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

------

Thursday, March 11, 2021

Today News செய்திகள் 11.03.2021 | TPC

Today News 11.03.2021 | TPC

இன்று மகாசிவராத்திரி! சிவனின் அருளை பெற்றுதரும்!

மகாசிவராத்திரி... நான்கு ஜாம பூஜைகள்...!!



வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகாசிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது. மகாசிவராத்திரி இன்று அனைத்து சிவன் கோவில்களும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

------

நீலகிரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

------

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எம். சுகுமார் அவர்களை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல்.

------

தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக 20 இடங்களில் வருமானவரித்துறை சோதனை. சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரையில் சோதனை நடந்துவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்.

------

லஞ்சம் பெற்றும் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் அளித்த பெண்ணை கைது செய்த காவல் ஆய்வாளருக்கு அபராதம்.

உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது மாநில மனித உரிமைகள் ஆணையம்.

------

என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.- பிரதமர் மோடி



------

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

------

நெல்லை தொகுதியை யாதவர் சமுதாயப் பிரமுகர்க்கு ஒதுக்க கோரி பாளை. தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்து கோன் சிலை முன்பு காலை .10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

------

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 12 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

------

பள்ளிப்பட்டு: சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் வக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வி.வி.பேட் மிஷின் மூலம் வாக்குப் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

------

ராணிப்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.7.01 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கறி வியாபாரம் செய்து வரும் ரபீக் அகமது என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

------

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

------

அர்ஜென்டினா நாட்டின் சுபுட் மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

------

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருப்பராய்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன சுவாமி சித்பவானந்தர் இயற்றிய ஸ்ரீமத் பகவத் கீதை ஆங்கில விளக்க உரை -புத்தகத்தை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

------

துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ .62.35 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம்;  6 தங்க பேஸ்ட் பைகளும் மீட்கப்பட்டன.

------

கொரோனா தொற்று நடவடிக்கைகளில்பொதுமக்கள்முகக்கவசம்அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெங்கு கொசுஉற்பத்தியாகும்இடங்களைக் கண்டறிந்துபுகை மருந்துஅடிக்க வேண்டும்என்று ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...