Monday, January 11, 2021

Today News செய்திகள் 11.01.2021 | TPC

Today News 11.01.2021 | TPC

நிபந்தனைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

பிளக்ஸ், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.



விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது - நீதிபதிகள்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான அனுமதி சீட்டு இன்று வழங்கப்படுகிறது.

------

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கம்.

பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோருக்காக ஜன.17 முதல் 19ஆம் தேதி வரை 9,120 பேருந்துகள் இயக்கம்.

------

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கான தடுப்பூசி செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி

------

ஆந்திராவில் மகா சங்கராந்தியை ஒட்டி நடக்கும் மாடு விடும் விழா, சேவல் சண்டை போட்டிகளுக்கு தடை

------

ஜன. 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

ஜன.13ஆம் தேதி வரை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிப்பு -  தமிழக அரசு.

------

முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக நீடிக்கிறது, தேமுதிக முரசு சின்னத்தில் தான் போட்டியிடும் – பிரேமலதா.

------

பொங்கல் ரிலீஸுக்கு மாஸ்டர், ஈஸ்வரன்  ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நிலையில், அரசு, 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சுகாதாரத்துறை தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிச்சு. இதையடுத்து, இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் தற்போது இருக்கும் 50% பார்வையாளர்கள் நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதிக்கு எதிராக வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவது போதாது, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் மீண்டும் 50% அனுமதி அளித்த அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

------

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்: டிரா செய்தது இந்தியா.

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

------

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை:

விவசாயிகள் தொடர்ந்து போராடலாம்-உச்சநீதிமன்றம் அனுமதி.

போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது- உச்சநீதிமன்றம்.

போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.

விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறையால் ஏமாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து.

மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது- நீதிபதிகள் கேள்வி.

சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?

------

அடிமை வாழ்வை அகற்றிட, அறப்போர் நடத்திய தியாகி, கொடி காத்த  திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்த தேசத்தின் விடுதலைக்காக தன் இன்னுயிரையே தந்த அப்பெருமகனின் ஒப்பிட முடியாத தியாகத்தை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து நன்றியோடு வணங்கிடுவோம்! - டிடிவி தினகரன்

------

தென் தமிழகமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ராமநாதபுரம்,விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு.

அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும்- வானிலை மையம்.

------

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296க்கு விற்பனை.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.4662-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

ரஜினிகாந்த் அறிக்கை:

அரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.

“அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்!” 

“நான் அரசியலுக்கு வர வேண்டுமென யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்"

------

குஜராத்தில் 10 மாதங்களுக்கு பின் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

------

Thursday, January 7, 2021

இன்றைய தினம் 07.01.2021

  • எழுத்தாளர் லட்சுமி இன்று நினைவு தினம்.

லட்சுமி (மார்ச் 23, 1921 - ஜனவரி 7, 1987) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவர். சமூகச் சிறுகதைகள், புதினங்கள் பெருமளவு எழுதியவர்.


திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்குப் இட்ட பெயர் திரிபுரசுந்தரி.


மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், சுமார் நூற்று ஐம்பது நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், ஆறு மருத்துவ நூல்கள் இவர் எழுதியவையாகும்.


பதவிகள் வகித்தாலும் பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே இவருடைய எதிர்பார்ப்பு. இவருடைய எழுத்துக்களில் பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளை தன்னுடைய எழுத்துக்களில் பின்னித் தந்தவர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------

  • மெல்லிசை மாமணி (Melody King) வி.குமார் மறைந்த நாளின்று.

இசையமைப்பாளர் வி.குமாரைப் (28-ஜுலை-1934 - 07-ஜனவரி-1996) பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்காது. ஆனால் அவருடைய பாடல்கள் பலவற்றை, பலசமயங்களில்  இசை நிகழ்ச்சிகளில் ரசித்திருப்பார்கள்.


இவரது பெற்றோர் வரதராஜு-தனபாக்கியம். 28.7.1934-இல் பிறந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன் தொலைபேசி இலாகாவில் பணியாற்றினார். இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே இசைக்குழு அமைத்து இசைக்கச்சேரிகள் நடத்திவந்ததோடு நாடகங்களுக்கும் இசை அமைத்து வந்தார். இவர் இசை அமைத்த முதல் நாடகம் ‘கண் திறக்குமா”. பிறகு ஓ.எம்.ஐ.ஏ, விவேகா ஃபைன் ஆர்ட்ஸ், மற்றும் மணக்கால் மணி குழுவினரின் நாடகங்களுக்கு இசை அமைத்து வந்தார்.

நண்பர் மூலமாக ராகினி ரிக்ரியேசன்ஸ்-இல் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. ராகினி கிரியேசன்ஸின் ”வினோத ஒப்பந்தம்” என்ற நாடகத்திற்கு முதன்முதலாக இசை அமைத்தார். ராகினி ரிக்ரியேசன்ஸில் தொடர்ந்து இசை அமைத்து வந்தபோது, அதன் இயக்குநர் கே.பாலசந்தருக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அப்படம் “நீர்க்குமிழி”.

வி.குமார் 1978-இல் இசையமைத்த ‘இவள் ஒரு சீதை’ என்ற படத்தில் பல்லவ நாட்டு ராஜகுமாரிக்கு பருவம் பதினெட்டு என்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய நேயர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் அவர்கள் ஐந்தே நிமிடங்களில் இவரது மெட்டுக்குப் பாடல் எழுதிக் கொடுத்தார்.

வி.குமாரின் மனைவி திருமதி.சொர்ணா. இவரும் ஒரு பாடகியாக அறிமுகமாகி வி,குமாருடன் ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தவுடன் பாடுவதை நிறுத்தியவர் .

Today News செய்திகள் 07.01.2021 | TPC

Today News 07.01.2021 | TPC

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது.



அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி கருத்து. 

வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மன உளைச்சல் அளிக்கிறது - பிரதமர் மோடி.

"வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம்" – ஒபாமா.

------

கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு - விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.

------

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல் செய்தது பள்ளிக்கல்வித்துறை.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

------

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினிரியோ மாரடைப்பால் காலமானார்.

------

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானத்தின் உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக  ரோபோ தொழில்நுட்பத்தை  இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

------

ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

------

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தல்

போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமன்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக பீட்டா அமைப்பு தகவல்.

------

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

------

நாடு முழுவதும் JEE-ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

------

சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

------

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

------

மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

இதே போன்று இமாச்சலப் பிரதேச அரசும் நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

------

நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலி இன்று டிஸ்சார்ஜ்.

------

லஞ்சம் பெற்ற திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதிதாக மனைப்பிரிக்க அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

------

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் -இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

------

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக புகோவ்ஸ்கி 62 ரன்களும், மார்னஸ் 67 ரன்களும் எடுத்தனர்.

------

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

------

Tuesday, January 5, 2021

Today News செய்திகள் 05.01.2021 | TPC

Today News 05.01.2021 | TPC

தை பூச நாள் - இனி அரசு விடுமுறை தினம்.




தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

------

10,11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொது தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளை திறக்க திட்டம்.

பள்ளிகள் திறப்பது குறித்து நாளையே கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

------

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் - தலைமை நீதிபதி அமர்வு வேதனை.

------

எம்.பி. - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்- சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

------

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்து உள்ளதால் மம்தா பேனர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

------

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

------

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

------

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 41 நாட்களாக விவசாயிகள் போராட்டம் குறித்தும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது

------

மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு

------

சென்னையில் தொடர் மழை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

------

இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளிவைத்துள்ளதாக தகவல்.

------

இந்தியாவில் வரும் 13-ம் தேதி (ஜன) - முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

------

தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.

------

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம்.

------

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர் மட்டம் - 46 அடி; நீர் இருப்பு - 45.80 அடியாக உள்ளது.

------

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை.

பறவைக் காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு.

------

Monday, January 4, 2021

Today News செய்திகள் 04.01.2021 | TPC

Today News 04.01.2021 | TPC


அசாமில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாணவிகள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ரூ.100 



உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவிச்சிருக்கார்.

------

புதுச்சேரியில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறக்க உயர்க்கல்வித்துறை உத்தரவு.

------

தமிழ்நாடு கொரோனா இன்றைய நிலவரம் 04.01.21

838 புதுத் தொற்றாளிகள்

இதில் 229 சென்னைவாசிகள். 

60,174 பேர்களுக்கு  டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

------

அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

------

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்தக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 10, 12 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்பது இன்றியமையாததாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரிய் கழக உறுப்பினர் கள், பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ளது.

------

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி:

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

------

டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கும் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கலாசார பிணைப்புகளை மேம்படுத்தவும், தமிழ் பாரம்பரியத்தை வெளிக்காட்டவும் இது உதவும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனை.

------

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்?

அரசியல் சண்டையை அரசியல் ரீதியில் சந்திக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 

சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி.

------

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - காஷ்மீரில், உதம்பூர் - ஸ்ரீநகர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

------

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் ரூ.29.06 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் நேற்று வரை 4.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

------

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் 60 பேர் மரணம்.

கடுமையான குளிரை தாங்க முடியாமல் 60 விவசாயிகள் உயிரிழப்பு.

விவசாயிகள் மரணம் குறித்து பாரதிய கிஷான் சங்கம் அறிவிப்பு.

------

காவல்துறை எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்க கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து¸ ஆதார் எண்ணை அளிக்க கோரி¸ பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி (OTP) வரும் என்று கூறி நமது விவரங்கள்¸ வங்கித் தொகை ஆகியவற்றை திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுகொள்கிறது.

------

KGF Chapter II Movie Teaser :-

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது. ஹோம்பாலே யூடியூப் சேனலில் டீஸர் வெளியிடப்படுகிறது.

------

Saturday, January 2, 2021

Today News செய்திகள் 02.01.2021 | TPC

Today News 02.01.2021 | TPC


அஜித், தனுஷ், ஜோதிகாவிற்கு 2020-ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.


தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட திரையுலகினருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

------

வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மின்சார ரயில் சேவை - தெற்கு ரயில்வே  அறிவிப்பு.

------

கர்நாடகாவில் ஹோட்டல்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அரசு அனுமதி.

பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது- கர்நாடக அரசு.

ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம்.

------

நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இடு பொருள் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

புயலால் பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடு பொருள் நிவாரணம் வழங்க உத்தரவு.

வருகிற 7 ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

------

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள் தயாராக உள்ளது.

ஜனவரி 15-ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

------

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ரோகித் சர்மா, ஷிப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

------

ரூ 1750க்கு ஸ்மார்ட் போன் எனக் கூறி பவர் பேங்க் அனுப்பும் மோசடி.

தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மர்ம நபர்கள் கோவிட் 19 காரணமாக தங்கள் நிறுவன ஸ்மார்ட் போன்களை ரூ 1750க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், தபால்கார ரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக்கூறி டுபாக்கூர் பவர்பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. 

கவனம் மக்களே!

------

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்.

------

பாஜக தலைமை வாய்ப்பளித்தால், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் - குஷ்பு

தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? - உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்

2021 சட்டபை தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா : குஷ்பு கேள்வி!

------

பலத்த மழையால் 5,263 கன அடி நீர்வரத்து: பாபநாசம் அணை மீண்டும் நிரம்பியது.

------

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

காஷ்மீர் : புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்.

------

வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி - கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

------

“டெல்லி மட்டும் அல்ல, நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

------

டிஎன்பிஎஸ்சி.யின் குருப்-1 முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது : 66 காலியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,748-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 130 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

Today News செய்திகள் 01.01.2021 | TPC

Today News 01.01.2021 | TPC


புதிய நம்பிக்கை, புதிய எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது 2021 புத்தாண்டு!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:



புதிய நம்பிக்கை, புதிய எதிர்பார்ப்புகளுடன் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 

------

கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளரான ஐ.பி.எஸ் அதிகாரி டி.ரூபா, வியாழக்கிழமை கர்நாடக மாநில கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை, அவர் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கர்நாடகாவின் மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருடன் ஏற்பட்ட பகிரங்கமான மோதலுக்கு மத்தியில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

------

தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்துடன் சேர்ந்து இன்று புத்தாண்டைக் கொண்டாடினார்.

தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் (பெண்கள்), அரசினர் குழந்தைகள் இல்லம் (ஆண்கள்) இயங்கி வருகின்றன. இதில், அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 48 ஆதரவற்ற ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

------

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனகா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

------

தமிழகத்தில் இன்று புதிதாக 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,935 ஆக அதிகரித்துள்ளது.

------

சென்னை மாநகரம் முழுவதும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

------

வட இந்தியாவில் கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், வரும் 3ம் தேதி முதல் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு

------

கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி; 50% இருக்கைகள், முகக்கவசம், தனி மனித இடைவெளி என கட்டுப்பாடுகள் விதிப்பு  - முதல்வர் பினராயி விஜயன்

------

கர்நாடகாவில் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்.

------

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...