Wednesday, March 17, 2021

Today News செய்திகள் 17.03.2021 | TPC

Today News 17.03.2021 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC


எளிமை, நேர்மை அரசியலில் சாத்தியம் என நம்புகிறோம், இதை யெல்லாம் தமிழகம் அத்தகைய தலைவர்களை கண்டிருக்கிறது என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். நேர்மையான அரசியல் எளிமையானதில்லை, அதை அடைவது கடினம்தான், ஆனால் அது சாத்தியம் என சகாயம் தெரிவித்துள்ளார்.

------

விஜய் சேதுபதி நடிப்பில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் புதிய படம் விஜய் சேதுபதியின் 46வது படமாகும். விஜய் சேதுபதியின் 46வது படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

------

தனியார் மருத்துவ கல்லூரி மேற்படிப்பில் குறைந்த இடம் கிடைத்ததில் அதிகாரிகளின் கூட்டுச்சதி இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேற்படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

------

சென்னை, கோவை உட்பட 20 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.400 கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வேளாண் பொருட்கள் விற்பனை என்று மோசடி செய்து ரூ.100 கோடிக்கு போலி ரசீது தயாரித்துள்ளதாகவும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

------

ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி இளைஞருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணை தொடங்கி 27 நாட்களில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

------

டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமனம், மும்பை காவல்துறை புதிய ஆணையராக ஹேமந்த் நகரல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

------

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து கோவை தங்கம் விலகினார். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோவை தங்கம் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. .மா.கா.லிருந்து விலகிய கோவை தங்கம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

------

ம.நீ.ம. பொருளாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரூ. 8 கோடி பறிமுதல்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பூர், கோவையில் உள்ள சந்திரசேகரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. தமிழக அரசின் மகப்பேறு பை உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்ததாராக சந்திரசேகர் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

------

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். விவசாயிகளின் நலன்களைக் காக்க திரிணாமுல் காங்கிரஸ் பாடுபடுகிறது. மேற்குவங்கத்தின் மேம்பாட்டுக்காக எனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

------

நாட்டுக்கான நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது, மாற்று அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

------

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் நிர்வாக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு வழங்க மடிக்கணினி, பிளாஸ்டிக் வாளிகள் 500-க்கும் மேற்பட்டவைகள் இருப்பதாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

------

சிவகாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கவிதா நகரில் பூச்சட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் பதுக்கியது தொடர்பாக 2 பேரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

------

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், திமுக தலைவர் மு..ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு..ஸ்டாலின் கருத்து தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறி உள்ளனர்.

------

தமிழகத்தில் தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், மக்களின் செல்வங்கள் அனைத்தும் சூறையாடப்படும் என டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

------

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

------

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...