Today News 13.12.2020 | TPC
நாளை முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி.
-----
2021-22-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்
குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில்
புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.
-----
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தவுடன்
மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும். ஜனவரியில்
காளைகளுடன் ஜல்லிகட்டு, மே மாத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு, இதற்கு நான் தயாராகிவிட்டேன்
- மநீம தலைவர் கமல்ஹாசன்.
-----
எனது பிறந்தநாளில் தொலைபேசி, குறுஞ்செய்தி
மற்றும் சமூகவலைதளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும்
மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய
கழக உடன்பிறப்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - டிடிவி தினகரன்
-----
தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்
13, 12, 20
1195 புதுத் தொற்றாளிகள்.
இதில் 340 சென்னைவாசிகள்.
69,143 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
1276 பேஷண்ட்டுகள் டிஸ்சார்ஜான நிலையில்
12 பேர் பலி
ஆக மொத்தம் 7,98,888 தொற்றாளிகள்,
7,76,878 டிஸ்சார்ஜ் & 11,895 மரணங்கள்.
-----
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு
ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு
ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கெஜ்ரிவால் கோரிக்கை.
-----
தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள
கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும் என்று
பா ம க நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
-----
திருப்பத்தூா் மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு
அலுவலகம் வாணியம்பாடியில் விரைவில் தொடங்கப்படும் என தமிழகத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா்
நிலோபா் கபீல் தெரிவித்தாா்.
-----
சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால
கடனுதவி திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 58 ஆயிரத்து 626 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக
மத்திய அரசு கூறியுள்ளது.
-----
தமிழகத்தில் முதற்கட்டமாக நாளை 600 மினி
கிளினிக்குகளை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.
-----
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்
என்பதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள்
குவிந்தனர்.
-----
தற்காலிக பணிக்காலம் நிறைவடையவுள்ள அரசு
செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கவேண்டும் என திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-----
கர்நாடகத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில்
வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக தொழிலாளர்கள் 125பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
-----
தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதிகளில்
மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக இடி
மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில்
வரும் 16, 17 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
-----
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில்
உள்ள 500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணியின்போது
தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-----
கொரோனாவால் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த
மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து
ரதத்தை பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
2,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்த முடியாது; ஆன்லைன்
மூலம் மட்டுமே செலுத்த முடியும். 10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----
No comments:
Post a Comment