Today News 09.12.2020 | TPC
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
-----
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது - மத்திய அரசு திட்டவட்டம்.
வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்.
இது தொடர்பான வரைவு அறிக்கையை விவசாய சங்கங்களுக்கு அனுப்பியது மத்திய அரசு.
3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - விவசாய சங்கங்கள்.
-----
“உரிய முகாந்திரம் இன்றி அவதூறு வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும்"
தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
-----
மாசுக்கட்டுப்பாடு வாரியமே ஊழலால் மாசுப்பட்டு காணப்படுகிறது.
டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர்.
இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு நோய்கள் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை.
-----
10 ரூபாய்க்கு காய்கறி வாங்க நெல்லை டவுனில் உள்ள போத்தீஸ் காய்கறி கடையில் அலைமோதியது கூட்டம்.
-----
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.
-----
ரஜினி கட்சி அறிவிக்கவுள்ள நிலையில் அவரது இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.
சென்னையில் போயஸ் கார்டனிலுள்ள ரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு (12 போலீசார் பாதுகாப்பு பணியில்) போடப்பட்டுள்ளது.
-----
“கொரோனா நோயாளிகள் வீட்டில் குறிப்பிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை"
வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தீர்ப்பு.
-----
"சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்."
லஞ்சம் கேட்பவரிடம், 'லஞ்சம் ஏன் கொடுக்கணும்' என கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வு துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பை புறக்கணிக்கக்கூடாது.
-----
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தோற்று உச்சம் பெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-----
நாகை, திருவாரூரில் முதல்வர் இன்று ஆய்வு.
வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார். பிராத்தனை செய்த முதல்வர் பழனிசாமிக்கு மாதா கோயில் பாதிரியார் ஆசி வழங்கினார்.
நாகூர் தர்காவில் குளம் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்.
நாகூர் தர்காவில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார்.
-----
நிவர் புயல் பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.
-----
திருப்பதியில் விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு நடவடிக்கை.
ஆன்லைன் மூலம் வருகிற 15ந்தேதி முதல் அறைகள் ஒதுக்கீடு.
-----
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் தான் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
-----
புயல் அச்சுறுத்தல் நீங்கியதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 நாள்களுக்கு பின் கடலுக்குச் சென்றனர்.
-----
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
-----
சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்:
சேலம் கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சீலநாயக்கன்பட்டி பிரிவிற்குட்பட்ட அண்ணாமலை நகர், காந்திநகர், ஜி.ஆர்.நகர், எஸ்.கே.நகர், ராமைய்யன்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
-----
No comments:
Post a Comment