Today News 25.12.2020 | TPC
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
-----
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தங்க தேர் வீதி உலா.
அதிகாலை 4.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்குப் பின் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தங்க ரதத்தை பெண் பக்தர்களே இழுத்துச் செல்வது வழக்கம் என்ற நிலையில், தேவஸ்தான பெண் ஊழியர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு நோய்தொற்று பரிசோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனர்.
நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர்.
-----
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு.
இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டப்படுகிறது.
தேவமைந்தன் பிறப்பை ஒட்டி தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
2021 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
-----
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 96வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.
நாட்டை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றவர், வளமான இந்தியாவை அமைப்பதற்கான, வாஜ்பாயின் முயற்சிகள் என்றும் நினைவுகூரப்படும் - பிரதமர்.
ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-----
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ டெலிகாம் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் இயங்க தேவைப்படும் மின்சாரத்தை துண்டித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் விவசாயிகள்.
-----
தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்.
1027 புதுத் தொற்றாளிகள். இதில் 292 சென்னைவாசிகள். 65,142 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
கோவிட் 19 தடுப்பூசி வெளியிடுவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது மத்திய அரசு : 4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை
-----
பழனி முருகன் கோவிலில் வரும் 28-12-2020 முதல் ரோப் கார் செயல்படும் என பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது .பக்தர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் புக் செய்தவர்கள் தகுந்த ஆதாரத்தை காண்பிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-----
கொரோனா தொற்று இல்லை. சளி, காய்ச்சல் என்று இருந்ததால் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நலமாக உள்ளேன். - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தகவல்.
-----
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி உடன் பிரதமர் உரையாடல்:
சென்னையில் தண்ணீர் குறைவாக கிடைக்கிறது விவசாயம் எவ்வாறு செய்கிறீர்கள் என பிரதமர் கேள்வி
கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி சொட்டு நீர் பாசனம் மூலமாக விவசாயம் செய்வதாக பதில்
தோட்டகலை துறை மூலமாக 3 ஏக்கர் பரப்பளவிற்கு 1 லட்சத்து 33ஆயிரம் மதிப்பில் 100 சதவீத மாணியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுத்தார்கள்.
இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு 40 ஆயிரம் லாபம் கிடைத்த நிலையில் சொட்டு நீர் பாசனம் மூலம் இந்த ஆண்டு 1 லட்சத்து 40 ஆயிரம் லாபம் கிடைத்ததாக கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி சுப்ரமணி பதில்.
-----
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத் தீயால் 3000 ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பல்.
-----
ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.
ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் வந்ததை மருத்துவமனை சுட்டிக்காட்டியுள்ளது.
-----
மு.க.அழகிரி அழைப்பு
தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜன.3ல் மதுரை வர வேண்டும்.
பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆலோசனை.
-----
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்பு
ரகானே, மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி பேறுகால விடுப்பில் சென்றுள்ள நிலையில், அஜின்க்யா ரகானே கேப்டனாக விளையாடுகிறார் - பிசிசிஐ
-----
கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு : அமைச்சர் செல்லூர் ராஜூ.
-----
ஜம்மு-காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் ரூ. 5 லட்சம் இலவச சுகாதாரக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!
-----
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் 2,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 6 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
-----
2021 ஹஜ், உம்ரா புனித பயணம் விண்ணப்பிக்க ரூ.300 போதும் : இந்திய ஹஜ் அசோஷியேசன் அறிவிப்பு
No comments:
Post a Comment