Today News 08.12.2020 | TPC
பாரத் பந்த்-க்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் கடைகள் அடைப்பு!!!
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்.
பாரத் பந்த் காரணமாக சென்னை விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை-மதுரை- சென்னை விமானம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
-----
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு. - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்.
கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த மசோதாவுக்கு ஒப்புதல்.
-----
சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக டிச-14 ஆம் தேதியில் ஆலோசனை.
மாநில, மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்பார்கள் - ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் அறிவிப்பு.
-----
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மின்துறை அதிகாரிகள், ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் நாராயணசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது
-----
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 311 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 209 பேரும், வீட்டுத் தனிமையில் 179 பேரும் என மொத்தம் 388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 45 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 308 (97.31 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
-----
எவரெஸ்ட் சிகரம்
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என கணக்கிட்டு நேபாள அரசு அறிவித்துள்ளது.
-----
"ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசிக்கு உரிமம் பெறலாம்"- மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல்.
-----
கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.
-----
"விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் - மூன்று வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
-----
3வது டி20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது
-----
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி:
பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.
ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பிரிட்டன் மக்களுக்கு இன்று முதல் செலுத்தப்படுகிறது.
-----
மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மன்னர்களை மக்கள் கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படாதது வேதனை அளிக்கிறது - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
-----
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி:
புதிய அறிவிப்பாணை வெளியிட்டு சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி.
-----
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.766 உயர்ந்தது.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.37,864க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் விலை 97 ரூபாய் உயர்ந்து ரூ.4733க்கு விற்பனை.
-----
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.
-----
மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனாவுக்கு இந்தியாவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவித்துள்ளார்.
-----
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.
-----
வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் வரும் 21ஆம் தேதியன்று மிக நெருக்கமாக வரும் என பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு 398 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ளதாகவும், இதன் பின்னர் 2080ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மீண்டும் வியாழன் - சனி கிரகங்கள் அருகருகே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
-----
No comments:
Post a Comment