Today News 06.12.2020 | TPC
அம்பேத்கர் நினைவு தினம் இன்று.
நம் தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்: பிரதமர் மோடி.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அம்பேத்கரின் பங்களிப்பை இன்று நாம் நினைவில் கொள்வோம்: ராகுல் காந்தி.
சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்.
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தோடும், சமநிலையோடும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தியவர். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அளப்பரிய பணிகளை எந்நாளும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம் - டிடிவி தினகரன்
-----
சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை.
நெல்லை, தென்காசியில் விடிய, விடிய மழை. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தூத்துக்குடியில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
-----
இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், ரெயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னை ரெயில்வே காவல் மண்டலத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் 900 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.
-----
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதை எளிதாக்குமாறு மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-----
ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
-----
போலி டாக்டர்கள் கொரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
-----
தமிழகத்தில் 1800 க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்அறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அவர்களது வாரிசுகள் ஆகியோரது உதவியாளரும் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து தெரிவித்துள்ளார்.
-----
சிட்னியில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களம் காணுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40-க்கு இப்போட்டி தொடங்குகிறது.
-----
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.86.25க்கு விற்பனை. ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.78.97க்கு விற்பனை.
-----
டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரியில் விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.
--
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்.
--
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு.
--
வரும் 8 தேதி தேசிய அளவில் விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டத்தில் மதிமுக பங்கேற்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
--
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
திட்டமிட்டபடி 8-ம் தேதி பந்த் நடக்கும் என விவசாயிகள் அறிவிப்பு
-----
விவசாயிகளுக்கு என்றும் தி.மு.க. துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் உள்ளது பாஜக அரசு என அவர் தெரிவித்துள்ளார்.
-----
செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் 1000 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
-----
மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது:- இந்திய வானிலை ஆய்வு மையம்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது புரெவி.
தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.
-----
சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்.
சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவங்கள் மூலம் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க திட்டம்.
-----
டிசம்பர் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதாக தகவல்.
-----
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 2021 புத்தாண்டில் வெளியாக உள்ளதாக தகவல்.
-----
No comments:
Post a Comment