Today News 28.12.2020 | TPC
ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமானார்:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஓராண்டுக்கும் மேலாக உடல்நலம் குன்றி இருந்த கரீமா பேகம், இன்று காலை உயிரிழந்தார். 2020ல் எத்தனையோ இழப்புகள்... ஏ.ஆர்.ரகுமானுக்கு இது பேரிழப்பு.
தன் பேட்டிகளிலும், மேடை பேச்சுகளிலும், தன் தாய் குறித்து ஏதேனும் ஒரு இடத்தில் பேசி விடுவார் ஏ.ஆர்.ரகுமான்.
-----
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-----
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1.19 கோடி பணம், 1.8 கிலோ தங்கம், 5.2 கிலோ வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளன - கோவில் நிர்வாகம்.
-----
கூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு
-----
ஒன் எலக்ட்ரிக் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் KRIDN இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறனுள்ளது. விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் பேட்டரியை ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் வண்டி 80 முதல் 110 கிலோமீட்டர் வரை ஓடும்.
இந்த வாகனங்களை வழங்கும் பணி ஐதராபாத்திலும் பெங்களூரிலும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கேரளத்திலும் வாகனங்களை வழங்கும் பணி ஜனவரியில் தொடங்குகிறது.
-----
"வெற்றிநடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு
நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி வேலூர்,
துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் - அதிமுக தலைமை கழகம்.
-----
தமிழ்நாட்டில், புதிதாக 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழந்தனர். 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது. பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது .
சென்னையில் 285 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 867 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
-----
தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி; பார்களில் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்! - தமிழக அரசு.
உள்ளே செல்ல மற்றும் வெளியே வர என பார்களில் இரண்டு வழிகள் ஏற்படுத்த வேண்டும், முகக்கவசம் கட்டாயம், சானிடைசர், வெப்ப பரிசோதனை என பல்வேறு நிபந்தனைகள் வெளியீடு
-----
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.
- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
-----
மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் இருந்து கட்டு கட்டாக புதிய பாட புத்தகங்கள் பறிமுதல்.
இரும்பு கடை வியாபாரி கைது - மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை.
-----
ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது - திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம்.
கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இது.
முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு -மாஸ்டர் படத்துக்கு 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக் கோரிக்கை.
-----
பாக்ஸிங் டே டெஸ்ட் : 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறல்.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வேட் 40, மர்னஸ் 28 ரன்கள் சேர்ப்பு.
2வது இன்னிங்சில் இந்திய அணி 326 ரன்கள் சேர்த்தனர்.
-----
மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும் - ரஜினிகாந்துக்கு முதலில் உடல்நலம்தான் முக்கியம். பின்னர்தான் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என நம்புகிறேன்.
பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று வரை அனைத்தையும் பெற தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
- கமல்.
-----
டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்பு.
-----
யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறினால் போலியாக அனுப்பப்படும் SMS களை மட்டும் பார்த்து ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கை பரிசோதித்து கொள்ளவும்.
-----
சொந்த வாகனத்தை, வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் குடும்பத்தார்களை தவிர, அதாவது தாய் தந்தையர், பிள்ளைகள், சகோதர சகோதரிகளைத் தவிர யார் எடுத்துச் சென்றாலும் கிரிமினல் குற்றம்.
- கேரள போலீஸ்!
-----
தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது.
-----
No comments:
Post a Comment