Friday, February 21, 2025

Today News செய்திகள் 21.02.2025 | TPC

 Today News 21.02.2025 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC

"தமிழகத்தில் மே 1 முதல் புதிய மினி பேருந்துகள்"

"தமிழகத்தில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்"

புதிய மினி பேருந்துகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தினாலும், பயன்பாட்டில் உள்ள அரசு பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் இல்லை - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

------

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அப்போது அவர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.



இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

------

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து

ரூ.64,200 ரூபாயகவும், ஒரு கிராம் ரூ.8,025 ரூபாய்க்கு விற்பனை.

------

சுங்க அதிகாரிகளை 10 மணிநேரம் காக்க வைத்த பெண்!

சீனாவில் இருந்து டிரோன் கேமராக்கள் இறக்குமதி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்ட விவகாரம்...

புது வண்ணாரப்பேட்டையில் search வாரன்ட் உடன் வந்த சுங்க அதிகாரிகளை கண்டதும், வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட பெண்...

பத்து மணி நேர காத்திருப்புக்கு பின் கதவை திறந்த நிலையில், அதிகாரிகள் சோதனை...

------

பெண்கள் பாதுகாப்பு - கெடுபிடி காட்டும் ரயில்வே!

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் எதிரொலி

மகளிர் பெட்டிகளுக்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக பயணித்த, 900 பேர் மீது வழக்குப்பதிந்து ரயில்வே காவல்துறை விசாரணை.

------

போக்சோ வழக்கு!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய விவகாரம்...

ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

------

தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல்!

நெல்லை தச்சநல்லூரில் தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்

செல்போன் கடை நடத்தி வரும் ராஜூ என்பவரை கைது செய்தது காவல்துறை

காதலை ஏற்க மறுத்ததால் காரில் கடத்திச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தகவல்

------

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப்பிடித்த போலீஸ்.

தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்குக் காலில் காயம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு.

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களில் ஏற்கனவே 2 பேர் கைது!

------

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த 285 சமூக ஊடக பதிவுகளை நீக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் X (ட்விட்டர்) நிறுவனத்துக்கு உத்தரவு

அந்த பதிவுகள் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ரயில் சேவைகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

------

டிஜிட்டல் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்வதில் கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. யுபிஐயில் இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்து வரும் கூகுள் பே பயனர்கள் இப்போது குறிப்பிட்ட பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.



ஏற்கனவே ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வரும் நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

------

சிறையில் கைதியை பார்க்க லஞ்சம் : வார்டன்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட்

தருமபுரி மாவட்ட சிறையில் கைதி பார்க்க லஞ்சம் வாங்கிய வார்டன்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தருமபுரியில் மாவட்ட சிறையில் 150க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். இங்கு கைதிகளை பார்க்க வருவோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக சிறை விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடத்திய விசாரணையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களை பார்க்கவந்த அவரது சகோதரரிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறை வார்டனங்களான சவுந்தர்ராஜன் மற்றும் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்

------

No comments:

Post a Comment

Today News செய்திகள் 21.02.2025 | TPC

 Today News 21.02.2025 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC ...