Saturday, April 3, 2021

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC



மும்பை மாநகரில் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய கொரோனா பாதிப்பு - கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பு ஆகும்.

------

YouTube  இல் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின்தான் வராரு என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலை பார்த்துள்ளனர்.

------

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழில் மூத்த மொழி பெயர்ப்பாளர் டாக்டர் ஹெச் பாலசுப்பிரமணியம் காலமானார்அவருக்கு வயது 90.

தொல்காப்பியத்தையும், பாரதியார் கவிதைகளையும் ஹிந்தியில் அவர் மொழி பெயர்த்துள்ளார்.

------

அந்தமான் கடல்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கிறது

------

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.

------

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் மாவோயிஸ்டுகள் உடன் துப்பாக்கிச்சண்டை - பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு என தகவல்.

------

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கைது.

------

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலர்.

 

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

இன்று வரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளது -ராஜீவ் ரஞ்ஜன்.

------

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் வரும்14ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக் கூடிய ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் - அறங்காவலர் குழு.

------

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐசியூ-விலிருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரபதி பவன் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதனால் ஐசியூவில் இருந்த அவர், தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாக ராஷ்ட்ரபதி பவன் தெரிவித்துள்ளது.

------

சென்னை வண்டலூர் - பெருங்களத்தூர் இடையே உயர் அழுத்த மின் கம்பி அறுந்ததால் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்; செங்கல்பட்டு - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது!

------

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்.

------

கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு.

------

தேனி மாவட்டம் போடி அருகே மாட்டுமந்தையில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்ரஞ்சன் கைது செய்யப்பட்டார். பணப்பட்டுவாடாவுக்காக சித்ரஞ்சன் கைதில் வைத்திருந்த ரூபாய் 1.50 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

------

கோவிட் - 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த அடுத்த சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் -முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே

------

இந்தியாவில் ஏழு கோடிக்கு மேற்பட்ட கோவிட் - 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

------

சிவகங்கை அருகே சோதனைச்சாவடியில் காரில் ஆயுதங்களுடன் சென்ற அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி கைது செய்யப்பட்டார். அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும் கார் ஓட்டுனர் வேலுமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------

ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய தரப்பில்

 முன்னாள் உலக சாம்பியன் மிராபாய் சானு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

------

அசாம் மாநிலத்தில் பிஜேபி வேட்பாளரின் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்றது தொடர்பாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் இரண்டு பேரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

------

மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலய தெப்ப திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

------

அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத் துறையின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த விசா தடையை அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

------

இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாளின்று.

------

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்த ...தி.மு.கவினர் ஓட்டுக்கு பணம் குடுக்க முயன்றதாக 4 பேர் இரவில்கைது

------

சமூக நீதியை பாதுகாப்பதற்காகவே, அஇஅதிமுக உடன் பா கூட்டணி சேர்ந்திருப்பதாக பா இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

------

குழந்தைகளிடம் சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

------

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...