Monday, December 14, 2020

Today News செய்திகள் 14.12.2020 | TPC

Today News 14.12.2020 | TPC


தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார்.


 

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

-----

அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

-----

பட்டாபிராம் அருகே திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் கார்த்திக் என்பவரின் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதுபேருந்து மோதியதில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

கார்த்திக் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்துக்கு தீ வைத்தனர்.

பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசம் - போலீசார் விசாரணை.

-----

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு.

புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு.

-----

சுற்றுலா தலங்களின் ஒன்றான மாமல்லபுரத்திலும் பொதுமக்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்-தமிழக அரசு.

-----

திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிறவிக் குறைபாடுகள் மற்றும் இருதய பிரச்சனைகள் உடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பொன்னையா திறந்து வைத்தார்

-----

எல்லை தாண்டி வந்ததாக 15க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு:

மீனவர்களை பிடித்து காங்கேசன் முகாமுக்கு அழைத்துச் சென்றனர், இலங்கை கடற்படையினர்.

3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

-----

இன்று மாலை ஜிமெயில், யூடியூப் போன்ற கூகுள் சார்ந்த தளங்கள் அனைத்தும் உலகளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது கூகுள், யூடியூப் மற்றும் ஜி மெயில்.

-----

கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது

பகைவனுக்கு அருள்வாய் எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

-----

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

-----

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய்க்கு குறைந்து 37 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 627 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம்  வெள்ளியின் விலை 30 காசு குறைந்து 67 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

-----

பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சா, மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிப்பது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தவிர்த்த படிப்புக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

-----

சென்னை ஐஐடியில் 14 நாட்களில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுள்ளது.

மாணவர் விடுதி மற்றும் உணவகம் மூலம் பரவியதால் விடுதியும் உணவகமும் மூடல்

-----

உணவு உட்கொள்ளும் இடத்தில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியம் வேண்டாம் – ராதாகிருஷ்ணன்.

-----

தமிழ்நாட்டில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது

இந்த திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் விரைவில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.

 

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 - 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்.

-----

திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி திங்கட்கிழமை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

(இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.)

-----

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...