Today News 13.01.2021 | TPC
போகிப் பண்டிகை:
வழக்கமான உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்; பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகம்!
------
போகிப்பண்டிகையையொட்டி சென்னை விமானநிலைய ஓடுபாதையில் புகை மண்டலம் சூழந்துள்ளதால் சுமாா் 17 விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகி பயணிகள் அவதி.
------
“சேலம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்"-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.15 முதல் ஜன.31 வரை நடத்த அனுமதி.
------
யூ டியூப் சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை-ஆபாசமான வீடியோக்களை நீக்கவும் உத்தரவு.
ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.
ஆபாசமான பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி.
------
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.621 கோடி செலவாகும் என கணக்கீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தகவல்.
கொரோனா பயத்தால் பூத்துகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூடுதல் செலவு.
------
கொரோனா காலத்தில் 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு.
நோய் கட்டுப்பாட்டுக்கு பகுதிக்கு வெளியேயுள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
------
மது அருந்தக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை
பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு தடுப்பூசியை அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..
வரும்16ம் தேதி முதல் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி Dose உள்ளது.
முதல்கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மண்டலத்தில் 68,800 தடுப்பூசி புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வந்துள்ளது.
ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி போட்ட உடன் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணி விடக்கூடாது -
முதல் டோஸ் போட்ட பின்பு 28 வது நாளில் 2 வது டோஸ் போட வேண்டும், அதனைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
மது உடல் நலத்திற்கு கேடானது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர் தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
தமிழ்நாட்டில் கோவிட் பாதிப்பு 10 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது.
தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.
சமூக வலைகளில் தவறாக பரப்புவார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
------
சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.
மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.
------
விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.
98 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வரவிரும்புகின்றனர்- அமைச்சர் செங்கோட்டையன்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை.
தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை.
------
வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவுயிட்டதால்ஒரு வாரத்திற்கு ட்ரம்ப்-ன் யூடுப் (YouTube Channel) முடக்கம்.
------
No comments:
Post a Comment