Monday, January 11, 2021

Today News செய்திகள் 11.01.2021 | TPC

Today News 11.01.2021 | TPC

நிபந்தனைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

பிளக்ஸ், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.



விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது - நீதிபதிகள்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம்.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான அனுமதி சீட்டு இன்று வழங்கப்படுகிறது.

------

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

சென்னையில் இருந்து 4,078 பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 5,993 பேருந்துகளும் இயக்கம்.

பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோருக்காக ஜன.17 முதல் 19ஆம் தேதி வரை 9,120 பேருந்துகள் இயக்கம்.

------

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கான தடுப்பூசி செலவை மத்திய அரசு ஏற்கும் - பிரதமர் மோடி

------

ஆந்திராவில் மகா சங்கராந்தியை ஒட்டி நடக்கும் மாடு விடும் விழா, சேவல் சண்டை போட்டிகளுக்கு தடை

------

ஜன. 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

ஜன.13ஆம் தேதி வரை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிப்பு -  தமிழக அரசு.

------

முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக நீடிக்கிறது, தேமுதிக முரசு சின்னத்தில் தான் போட்டியிடும் – பிரேமலதா.

------

பொங்கல் ரிலீஸுக்கு மாஸ்டர், ஈஸ்வரன்  ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடந்த நிலையில், அரசு, 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், சுகாதாரத்துறை தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிச்சு. இதையடுத்து, இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற்றதால் தற்போது இருக்கும் 50% பார்வையாளர்கள் நடைமுறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதிக்கு எதிராக வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காட்சிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்துவது போதாது, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திரையரங்குகளில் மீண்டும் 50% அனுமதி அளித்த அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

------

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்: டிரா செய்தது இந்தியா.

சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

------

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை:

விவசாயிகள் தொடர்ந்து போராடலாம்-உச்சநீதிமன்றம் அனுமதி.

போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது- உச்சநீதிமன்றம்.

போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.

விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறையால் ஏமாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து.

மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது- நீதிபதிகள் கேள்வி.

சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?

------

அடிமை வாழ்வை அகற்றிட, அறப்போர் நடத்திய தியாகி, கொடி காத்த  திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு நாள் இன்று. இந்த தேசத்தின் விடுதலைக்காக தன் இன்னுயிரையே தந்த அப்பெருமகனின் ஒப்பிட முடியாத தியாகத்தை ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து நன்றியோடு வணங்கிடுவோம்! - டிடிவி தினகரன்

------

தென் தமிழகமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ராமநாதபுரம்,விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு.

அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும்- வானிலை மையம்.

------

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296க்கு விற்பனை.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.4662-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

ரஜினிகாந்த் அறிக்கை:

அரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.

“அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்!” 

“நான் அரசியலுக்கு வர வேண்டுமென யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்"

------

குஜராத்தில் 10 மாதங்களுக்கு பின் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.

------

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...