Friday, January 22, 2021

Today News செய்திகள் 22.01.2021 | TPC

Today News 22.01.2021 | TPC


சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள்
பல்வேறு கோயில்களில் அ.ம.மு.க.வினர் வழிபாடு!



பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை பெங்களூரு பழைய விமான நிலையம் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற ஆலோசனை!
------

சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தடையில்லா சான்றிதழ் வழங்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
------

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ந்த கொள்ளை!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இன்று காலையில் வங்கி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது 6 பேர் வாடிக்கையாளர்கள்போல் பின் தொடர்ந்துவந்துள்ளனர். வங்கியை திறந்தபிறகு உள்ளே நுழைந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, அலுவலகத்தின் மேனேஜர் உட்பட 6 பேரை கட்டிப்போட்டு, லாக்கரின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
------

கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.
------

சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை.
------

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்; தனி விமானத்தில் மருத்துவமனை விரைந்த குடும்பத்தினர்!
------

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 22.01.21
574 புதுத் தொற்றாளிகள்.
இதில் 155 சென்னைவாசிகள். 
61,922 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது
689 பேஷண்டுகள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 8 பேர் பலி.
ஆக மொத்தம் 8,33,585 தொற்றாளிகள், 8,16,205 டிஸ்சார்ஜ் & 12,307 மரணங்கள்.
------

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்; முதற்கட்டமாக 35 வேட்பாளர்கள் அறிவிப்பு.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் மட்டுமே.

அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் - சீமான்.
------

வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.

கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பேச்சுவார்த்தை நிறைவு.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தல்.
------

இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. மத்தியபிரதேசம், அரியானா, மராட்டியம், சத்தீஷ்கர், இமாச்சலம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
------

சசிகலாவின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு சசிகலா உடலில் 75 சதவீத ஆக்சிஜன் அளவே இருந்தது. சசிகலா தெளிவாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
------

சபரிமலையில் இந்தாண்டு மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 21.17 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வருவாய் குறைந்தது. கடந்தாண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 269 கோடி வருவாய் கிடைத்த நிலையில் தற்போது 92.2 சதவீதம் குறைந்துள்ளது.
------

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.
------

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரை.

கொரோனா தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி.
------

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
------

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,660-க்கும் சவரன் ரூ.37,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கு விற்பனையாகிறது.
------

போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி.
------

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசப் பொதுத்தேர்வு வழிகாட்டி நூல்: ஒடிசாவில் அறிவிப்பு.
------

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் ஜன.28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு:

வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்.
------

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.




கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்   -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
------

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்னால்டின் புகழ்பெற்ற டெர்மினேட்டர் படத்தில் வரும், "வாழ வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள்" என்ற வசனத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார்.
------

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...