Today News 21.01.2021 | TPC
பிரபல கிறிஸ்துவ போதகர் பால் தினகரனுக்கு சொந்த நிறுவனத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத வெளிநாட்டு முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் மேலும் 2 நாட்களுக்கு சோதனை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------
அடுத்த மாதம் கல்லூரிகள் திறப்பு?
தமிழகத்தில் முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை திட்டம்.
மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை.
------
நிவர் புயல் பாதிப்பு; ரூ.26.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 கோடியும், மாநில நிதியாக ரூ.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
------
புனே: மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தில்தான் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட மருந்துக்களை பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
------
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, மதுராந்தகம் ஏரி சுமார் ரூ.125 கோடியில் விரைவில் புனரமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 5 பொறியாளர்களை அமைத்து நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டன என்றார்.
------
சசிகலா உடல்நிலை குறித்து அறிய டாக்டர் சிவக்குமார் உடன் பெங்களூரு விரைந்தார் டிடிவி தினகரன்.
இளவரசி மகனும் ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஒ-வுமான விவேக்கும் பெங்களூரு சென்றார்.
------
சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
- மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார்.
------
சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா தம்பி திவாகரன் குற்றச்சாட்டு
சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது. சசிகலாவுக்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்.
- திவாகரன்
------
பெங்களூரில் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு:
சசிகலா உடல் நிலை சீராக உள்ளது.
சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிடி ஸ்கேன் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது.
சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம்.
சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
---
தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சின்னம்மாவுக்கு சரியான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும்.
கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
------
மூன்றே நாள்களில் 2.5 கோடி டவுன்லோடு... - 'சிக்னல்' செயலியின் கிடுகிடு வளர்ச்சி!
கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
------
மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து.
------
மதுபானங்களுக்கு ரசீது வழங்க உத்தரவு:
மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்.
மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
------
தடுப்பூசியை செலுத்தாமல் உடலின் மீது வைத்துப் பொய்யாகப் படம்பிடித்த அதிகாரிகள்.
கர்நாடகத்தின் தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகப் பொய்யாகப் படம்பிடித்துக் கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
------
ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
13 மாவட்டங்களில் உள்ள கிராம பணியாளர்கள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க ஆந்திர அரசு திட்டம்.
------
ராஜா முத்தையா கல்லூரி மூடல்:
கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடல்.
அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையான கட்டணம் கேட்டு 43 நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் மூடல்.
மாலை 4 மணிக்குள் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு.
------
திமுக கூட்டணிக்குள் கமலை கொண்டுவர முயற்சிக்கவில்லை. ஆனால், அவர் வந்தால் வரவேற்போம் - கே.எஸ்.அழகிரி
------
விசிக தனி சின்னத்தில்தான் போட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது உறுதி.
உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை - திருமாவளவன்.
------
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு.
தனது முதல் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் முடித்து கொண்டு சொந்த கிராமத்திற்கு வருகை.
செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலம்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி இருப்பதால் நடராஜனை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் நடராஜன் உடன் கைகுலுக்கி கொள்வதற்கும் அவருக்கு சால்வை அணிவிக்கவும் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் சின்னம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.
------
No comments:
Post a Comment