Today News 11.12.2020 | TPC
இன்று ( 11-12-2020) மகாகவி பாரதியார்
பிறந்தநாள் !
பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல்
கவிதை உள்ளிட்டவற்றில் பாரதி சிறந்து விளங்கினார் - முதலமைச்சர் பழனிசாமி.
பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு
நிகராக உயர வேண்டும் என எண்ணினார் - பிரதமர் மோடி.
நாட்டின் இன்றைய நிலையை நினைக்கும்போது
'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன
- ஸ்டாலின்.
-----
பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து
மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் -அண்ணா பல்கலைக்கழகம்
அறிவிப்பு.
நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு.
-----
திருப்பதியில் வயதானவர்கள் மற்றும்
10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் இனி தரிசனம் மேற்கொள்ளலாம். கொரோனா காரணமாக தற்காலிகமாக
தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை விலக்கி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு.
மற்றும் - திருப்பதி ஏழுமலையான் கோவிலில்
வைகுண்ட ஏகாதசிக்காண தரிசன டிக்கெட் இன்று காலை 6.30 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு
www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் தொடக்கம்.
-----
வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம்
விடுவிப்பு:
ரூ.7.37 கோடி கணக்கில் காட்டப்படவில்லை
என கோரி,கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு.
கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும்
விடுவிப்பு.
-----
சென்னையில் நாளை மறுநாள் தேமுதிக தலைவர்
விஜயகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை.
-----
சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
கோயிலில் வழிபாட்டிற்காக நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி.
-----
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மருத்துவம்
படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 3 பேர் கைது.
கடுவனூர் கிராமத்தில் மருத்துவம் பார்த்த
போலி மருத்துவர்கள் கணேசன், ராமசந்திரன், சக்திவேல் ஆகியோர் கைது.
-----
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு
சிறப்புமுகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற
உள்ளது.வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் புதிதாக சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி
மாற்றம், பிழைகள் இருப்பு என அனைத்தும் தங்கள் வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும்
சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து
பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்து பயன்பெறலாம்.
டிசம்பர் 12.12.2020 மற்றும் 13.12.2020.
-----
பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப்பதிவு
செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு.
ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த
பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.
குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த
பின் பதிவு செய்யுங்கள்: தமிழக அரசு.
-----