Tuesday, December 22, 2020

Today News செய்திகள் 21.12.2020 | TPC

Today News 21.12.2020 | TPC

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு பிறந்தநாள்: 

மக்களுக்கு பணியாற்றிட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.

-----

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு.

2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற ஊழியர்கள் இதன் மூலம் பணப்பலன்கள் பெற முடியும் - தமிழக அரசு.

-----

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் கிடையாது: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

--

சென்னை மதுரவாயில் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே உள்ள 2 சுங்கச்சாவடியில் பொங்கல் வரை 50% கட்டணம் வசூலிக்கப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 50% சுங்கக்கட்டணம் வசூலை பொங்கல் வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-----

டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து குஷ்பூ-வுக்கு சரியான புரிதல் இல்லை: கமல்ஹாசன்

-----

பிரிட்டனில் புதியவகை கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு ஒருவாரம் தடை விதித்து துருக்கி, சவுதி அரேபிய நாடுகள் அறிவித்துள்ளன.

-----

தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி நடவடிக்கை:

தனியாருக்கு அனுமதிக்கப்பட்ட மின்சார பராமரிப்பு பணி உத்தரவு ரத்து

சென்னையில் 2 துணை மின் நிலையங்கள் உட்பட 5 நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விட்ட உத்தரவு ரத்து

-----

அன்பார்ந்த செவிலியர்களுக்கு, 

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் புற ஆதார முறையில் (Outsourcing) பணியமர்த்தப்பட உள்ளனர். 

இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஒரு மாஃபியா கும்பல் இப்பணியிடங்களை நிரந்தர அரசு வேலை என்றும், அந்த பணியிடங்களுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. 

எனவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. 

புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். 

இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே. 

எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்ள செவிலியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது. 

இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்கள் நிரந்தர பணிக்கு உரிமை கோரக் கூடாது என்று அரசாணையில் (R.No: 96109/UHC/S2/2020 Office of the DPH, Chennai    Dated: 15.12.2020) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்கள் மார்ச் 2021வரை மட்டுமே என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே நிரந்தரமற்ற, நிச்சயதன்மையற்ற இந்த தனியார் ஒப்பந்த பணிக்கு செவிலியர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

மேலும், தற்போதைய சூழலில் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த மினி கிளினிக் திட்டத்தில்  பணிபுரிய விருப்பமுள்ள செவிலியர்கள் இந்த உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  

இந்த பணிக்கு யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால் கீழ்க்கண்ட முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும். 

இயக்குனர், 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தேனாம்பேட்டை, சென்னை. 

Ph: 044 - 24320802 (EXTN - 203)

-----

Monday, December 14, 2020

Today News செய்திகள் 14.12.2020 | TPC

Today News 14.12.2020 | TPC


தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார்.


 

நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

-----

அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

-----

பட்டாபிராம் அருகே திருவள்ளூர் மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் கார்த்திக் என்பவரின் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதுபேருந்து மோதியதில் கார்த்திக் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

கார்த்திக் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்துக்கு தீ வைத்தனர்.

பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசம் - போலீசார் விசாரணை.

-----

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.

தமிழகம், புதுச்சேரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பிரசர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு.

புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை.

அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரியில் விவசாயி சின்னம் ஒதுக்கீடு.

-----

சுற்றுலா தலங்களின் ஒன்றான மாமல்லபுரத்திலும் பொதுமக்கள் இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்-தமிழக அரசு.

-----

திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பிறவிக் குறைபாடுகள் மற்றும் இருதய பிரச்சனைகள் உடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பொன்னையா திறந்து வைத்தார்

-----

எல்லை தாண்டி வந்ததாக 15க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு:

மீனவர்களை பிடித்து காங்கேசன் முகாமுக்கு அழைத்துச் சென்றனர், இலங்கை கடற்படையினர்.

3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

-----

இன்று மாலை ஜிமெயில், யூடியூப் போன்ற கூகுள் சார்ந்த தளங்கள் அனைத்தும் உலகளவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது கூகுள், யூடியூப் மற்றும் ஜி மெயில்.

-----

கூர்கா படத்தை தயாரித்த 4 Monkeys Studio தயாரிப்பு நிறுவனம் தற்போது எதார்த்த நடிகர் M.சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது

பகைவனுக்கு அருள்வாய் எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனிஸ் இயக்குகிறார்.

-----

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்றது. கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

-----

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய்க்கு குறைந்து 37 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 627 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம்  வெள்ளியின் விலை 30 காசு குறைந்து 67 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

-----

பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சா, மதுவிற்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பிப்பது இல்லை என்று தெரிவித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தவிர்த்த படிப்புக்கு வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

-----

சென்னை ஐஐடியில் 14 நாட்களில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படுள்ளது.

மாணவர் விடுதி மற்றும் உணவகம் மூலம் பரவியதால் விடுதியும் உணவகமும் மூடல்

-----

உணவு உட்கொள்ளும் இடத்தில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அலட்சியம் வேண்டாம் – ராதாகிருஷ்ணன்.

-----

தமிழ்நாட்டில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது

இந்த திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் விரைவில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.

 

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 - 8 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும்.

-----

திங்கட்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் RTGS வசதி செயல்படும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

மின்னணு முறையில் பெருந்தொகைப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான RTGS வசதி திங்கட்கிழமை முதல் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது.

(இப்போது இந்த வசதி வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.)

-----

Sunday, December 13, 2020

Today News செய்திகள் 13.12.2020 | TPC

 Today News 13.12.2020 | TPC

நாளை முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி.

-----

2021-22-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் நாளை தொடங்குகிறது.

-----

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும்.  ஜனவரியில் காளைகளுடன் ஜல்லிகட்டு, மே மாத்தில் கயவர்களோடு மல்லுக்கட்டு, இதற்கு நான் தயாராகிவிட்டேன் - மநீம தலைவர் கமல்ஹாசன்.

-----

எனது பிறந்தநாளில் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூகவலைதளங்கள் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மற்றும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களாம் என் பாசத்திற்குரிய கழக உடன்பிறப்புகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் - டிடிவி தினகரன்

-----

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 13, 12, 20

1195 புதுத் தொற்றாளிகள்.

இதில் 340 சென்னைவாசிகள்.

69,143 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

1276 பேஷண்ட்டுகள் டிஸ்சார்ஜான நிலையில் 12 பேர் பலி

ஆக மொத்தம் 7,98,888 தொற்றாளிகள், 7,76,878 டிஸ்சார்ஜ் & 11,895 மரணங்கள்.

-----

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் கெஜ்ரிவால் கோரிக்கை.

-----

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும் என்று பா ம க நிறுவனர் மருத்துவர் ச ராமதாசு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

-----

திருப்பத்தூா் மாவட்டத்துக்கான வேலைவாய்ப்பு அலுவலகம் வாணியம்பாடியில் விரைவில் தொடங்கப்படும் என தமிழகத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் தெரிவித்தாா்.

-----

சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கடனுதவி திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 58 ஆயிரத்து 626 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

-----

தமிழகத்தில் முதற்கட்டமாக நாளை 600 மினி கிளினிக்குகளை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி.

-----

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

-----

தற்காலிக பணிக்காலம் நிறைவடையவுள்ள அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்கு நிரந்தர பணி நியமனம் வழங்கவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

-----

கர்நாடகத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக தொழிலாளர்கள் 125பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

-----

தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு

-----

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள 500 ஆண்டு கால பழமையான குழம்பேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக புனரமைப்பு பணியின்போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

-----

கொரோனாவால் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை கோயில், வெண்ணெய் உருண்டை பாறை,  ஐந்து ரதத்தை பார்வையிட நாளை முதல் அனுமதிக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 2,000 பேருக்கு அனுமதி வழங்கப்படும். நுழைவு கட்டணத்தை பணமாக செலுத்த முடியாது; ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். 10 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----

Saturday, December 12, 2020

Today News செய்திகள் 12.12.2020 | TPC

Today News 12.12.2020 | TPC

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.


நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்..!! - பிரதமர் மோடி வாழ்த்து.

--

ரஜினி நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ உளமாற வாழ்த்துகிறேன் - எடப்பாடி பழனிசாமி.

--

அதிசய பிறவியியே நீங்கள் வாழ்க பல்லாண்டு காலம்

'"அண்ணன் ரஜினிகாந்த்"" அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் -  "நடிகர் செந்தில்"

--

ரஜினிகாந்த் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் - திமுக தலைவர் ஸ்டாலின்.

--

அன்பு சகோத‌ர‌ர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - அமைச்சர் ஜெயக்குமார்.

--

நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.அழகிரி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

-----

நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது - சிறுத்தை சிவா

-----

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சிறுநீரக கோளாறு காரணமாக ராஞ்சியில் சிகிச்சை பெற்று வருகிறார் லாலு பிரசாத்.

-----

தாம்பரம் - நாகர்கோவில் இடையே வரும் 16ம் தேதி முதல் வாரம் மூன்று முறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

-----

கொரோனா தடுப்பூசி முன்னுரிமை குழுவில் மக்கள் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் - ஹரியானா அரசு

-----

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதம் மட்டும் உண்டியலில் ரூபாய் 65.4 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் மட்டும் 9 லட்சம் பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளனர்.

-----

உத்ரகாண்டில் வரும் 15-ஆம் தேதி முதல் கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

-----

அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெற்று சுமூகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதே எனது பிறந்தநாள் வேண்டுதல்!

- இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ட்வீட்

-----

தமிழகம் முழுவதும் 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.

சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை ரூ.10 லட்சம் பறிமுதல்

-----

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் இசையமைப்பாளர்  இளையராஜா.

-----

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை.

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது.

-----

நாமக்கல் .நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை  25 காசுகள் உயர்ந்து முட்டை விலை 4.40 காசுகளாக விலை நிர்ணயம். குளிர்காலம் என்பதால் முட்டை நுகர்ச்சி அதிகரிப்பால் விலை உயர்வு

-----

ஆண்டு தோறும் டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) கடைபிடிக்கப்படுகிறது.

-----

வேலூரில் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. பொன்னை, பாலாற்றில் இரு கரையும் தொட்டு ஆர்ப்பரிக்கும் தண்ணீர்.

-----

அடுத்த வாரம் முதல் ஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் - அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தகவல்.

-----

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

Friday, December 11, 2020

Today News செய்திகள் 11.12.2020 | TPC

Today News 11.12.2020 | TPC

இன்று ( 11-12-2020) மகாகவி பாரதியார் பிறந்தநாள் !


பெண் அடிமைத்தனம், ஜாதிய கொடுமைகள், உட்பட பல அடக்குமுறைகளுக்கெல்லாம், தன் எழுத்துக்கள் மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர் !

பக்தி, புரட்சி, காதல், தியாகம், அரசியல் கவிதை உள்ளிட்டவற்றில் பாரதி சிறந்து விளங்கினார் - முதலமைச்சர் பழனிசாமி.

பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் - பிரதமர் மோடி.

நாட்டின் இன்றைய நிலையை நினைக்கும்போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன - ஸ்டாலின்.

-----

பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

நாள் ஒன்றுக்கு  5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு.

-----

திருப்பதியில் வயதானவர்கள் மற்றும் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் இனி தரிசனம் மேற்கொள்ளலாம். கொரோனா காரணமாக தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை விலக்கி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு.

மற்றும் - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்காண தரிசன டிக்கெட் இன்று காலை 6.30 மணி முதல்  ஆன்லைனில் முன்பதிவு www.tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையத்தில் தொடக்கம்.

-----

வருமான வரி வழக்கில் கார்த்திக் சிதம்பரம் விடுவிப்பு:

ரூ.7.37 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என கோரி,கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு.

கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதியும் விடுவிப்பு.

-----

சென்னையில் நாளை மறுநாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை.

-----

சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபாட்டிற்காக நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி.

-----

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 3 பேர் கைது.

கடுவனூர் கிராமத்தில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கணேசன், ராமசந்திரன், சக்திவேல் ஆகியோர் கைது.

-----

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்புமுகாம்  தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் புதிதாக சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம், பிழைகள் இருப்பு என அனைத்தும் தங்கள் வாக்களிக்கும் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்கள் பகுதியில் உள்ளவர்கள் அந்த தேதிகளில் சென்று படிவம் கொடுத்து பெயரினை வரும் தேர்தலுக்குள் சேர்த்து பயன்பெறலாம்.

டிசம்பர் 12.12.2020 மற்றும் 13.12.2020.

-----

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப்பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு.

ஒரு முறை குழந்தையின் பெயரைப் பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது.

குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் பதிவு செய்யுங்கள்: தமிழக அரசு.

-----

Thursday, December 10, 2020

Today News செய்திகள் 10.12.2020 | TPC

Today News 10.12.2020 | TPC

ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகள் ரத்து.

ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பான வழக்குகள் ரத்து.

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும்- நீதிபதி

கட்சி தலைவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

-----

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் – இன்று.



60 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு. கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு,  இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி!

-----

மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள் மூலம் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

‘மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், டிச.21 முதல் 26 வரை அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஜனவரி 6-ல் இறுதி செய்யப்படும்

-----

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியும் ஆன கவுதம் கம்பீர் மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததற்காக கம்பீர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

-----

டிசம்பர் 13-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்.

'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற பெயரில் கமல்ஹாசன் தொடர் பிரசார பயணம்.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம்.

-----

நீட் தேர்வு ஓஎம்ஆர் (OMR Sheet) ஷீட் மதிப்பெண்ணில் குளறுபடி; விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்க: தேர்வு முகமைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

-----

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. 551 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 393 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். 158 பேர் பங்கேற்கவில்லை. எம்பிபிஎஸ் படிப்பில் அரசு கல்லூரிகளில் 42 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 இடங்களும் நிரம்பின.

-----

புதுச்சேரியில் போதை ஊசி விற்ற ஜிப்மர் மருத்துவர் துரைராஜன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான மருத்துவர், கஞ்சா பெறுவதற்காக போதை ஊசியை விற்றுள்ளார்.

-----

டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால், இதை இடித்து விட்டு டெல்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-----

சர்வதேச ஆயுத இறக்குமதி:-

கடந்த 2019ல் சர்வதேச அளவில் அதிகளவு ஆயுதங்களை இறக்குமதி செய்ததில், சவூதி அரேபியா முதல் இடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

-----

முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும்:-

தமிழக அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

-----

அடுத்த ஆண்டு முதல் ஜே.இ.இ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்.

நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

-----

இந்தியா Vs இங்கிலாந்து கிரிக்கெட்  அணிகள் மோதும் அந்தோணி டி மெல்லோ டிராபிக்கான 4  டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் 2021 பிப்ரவரி - 5ல் சென்னையில் நடைபெறும்.

-----

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது.



படப்பிடிப்பில் ஹீரோ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

-----

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கான சாத்திய கூறுகள் குறைவு. பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

-----

Wednesday, December 9, 2020

Today News செய்திகள் 09.12.2020 | TPC

Today News 09.12.2020 | TPC


பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா (29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 



விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

-----

வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதென்பது இயலாதது - மத்திய அரசு திட்டவட்டம்.

வேளாண் சட்டங்களில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம். 

இது தொடர்பான வரைவு அறிக்கையை விவசாய சங்கங்களுக்கு அனுப்பியது மத்திய அரசு.

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை - விவசாய சங்கங்கள்.

-----

“உரிய முகாந்திரம் இன்றி அவதூறு வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும்"

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

-----

மாசுக்கட்டுப்பாடு வாரியமே ஊழலால் மாசுப்பட்டு காணப்படுகிறது.

டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர்.

இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு நோய்கள் உருவாக நாமே காரணமாகி விடுகிறோம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை.

-----

10 ரூபாய்க்கு காய்கறி வாங்க நெல்லை டவுனில் உள்ள  போத்தீஸ் காய்கறி கடையில் அலைமோதியது கூட்டம்.

-----



இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பார்தீவ் பட்டேல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.

-----

ரஜினி கட்சி அறிவிக்கவுள்ள நிலையில் அவரது இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.

சென்னையில் போயஸ் கார்டனிலுள்ள ரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு (12 போலீசார் பாதுகாப்பு பணியில்) போடப்பட்டுள்ளது.

-----

“கொரோனா நோயாளிகள் வீட்டில் குறிப்பிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டத் தேவையில்லை"

வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தீர்ப்பு.

-----

"சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்."

லஞ்சம் கேட்பவரிடம், 'லஞ்சம் ஏன் கொடுக்கணும்' என கேட்க வேண்டும். ஊழலுக்கு எதிரான செயல்பாடுகளில் பங்கேற்க வேண்டும். லஞ்சப் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு, மாநில லஞ்சஒழிப்புத்துறை, மத்திய புலனாய்வு துறைக்குரியது என எண்ணி, தங்களது பங்களிப்பை புறக்கணிக்கக்கூடாது.

-----

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தோற்று உச்சம் பெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

-----

நாகை, திருவாரூரில் முதல்வர் இன்று ஆய்வு.

வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதல்வர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார். பிராத்தனை செய்த முதல்வர் பழனிசாமிக்கு மாதா கோயில் பாதிரியார் ஆசி வழங்கினார்.

நாகூர் தர்காவில் குளம் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார்.

நாகூர் தர்காவில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை செய்தார்.

-----

நிவர் புயல் பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.

-----

திருப்பதியில் விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு நடவடிக்கை.



ஆன்லைன் மூலம் வருகிற 15ந்தேதி முதல் அறைகள் ஒதுக்கீடு.

-----

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் தான் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

-----

புயல் அச்சுறுத்தல் நீங்கியதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 14 நாள்களுக்கு பின் கடலுக்குச் சென்றனர்.

-----

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

-----

சேலத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்:

சேலம் கிச்சிப்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு  பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல்  மதியம் 2 மணி வரை சீலநாயக்கன்பட்டி பிரிவிற்குட்பட்ட அண்ணாமலை நகர்,  காந்திநகர், ஜி.ஆர்.நகர், எஸ்.கே.நகர், ராமைய்யன்காடு ஆகிய பகுதிகளில்  மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்  குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

-----

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...