Tuesday, December 8, 2020

Today News செய்திகள் 08.12.2020 | TPC

Today News 08.12.2020 | TPC


பாரத் பந்த்-க்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் கடைகள் அடைப்பு!!!


தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்.

பாரத் பந்த் காரணமாக சென்னை விமானநிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை-மதுரை- சென்னை விமானம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.

-----

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 20 சதவீதம் இடஒதுக்கீடு. - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்.

கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த மசோதாவுக்கு ஒப்புதல்.

-----

சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக டிச-14 ஆம் தேதியில் ஆலோசனை.

மாநில, மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்பார்கள் - ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் அறிவிப்பு.

-----

புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மின்துறை அதிகாரிகள், ஊழியர் சங்கங்களுடன் முதல்வர் நாராயணசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது

-----

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 311 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 209 பேரும், வீட்டுத் தனிமையில் 179 பேரும் என மொத்தம் 388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 45 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 308 (97.31 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

-----

எவரெஸ்ட் சிகரம்



எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என கணக்கிட்டு நேபாள அரசு அறிவித்துள்ளது.

-----

"ஒரு சில வாரங்களில் கொரோனா தடுப்பூசிக்கு உரிமம் பெறலாம்"- மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் தகவல்.

-----

கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

-----

"விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும் - மூன்று வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும்" - தி.மு.க  தலைவர் ஸ்டாலின்.

-----

3வது டி20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது

-----

பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி:

பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.

ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பிரிட்டன் மக்களுக்கு இன்று முதல் செலுத்தப்படுகிறது.

-----

மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மன்னர்களை மக்கள் கொண்டாடுகின்றனர். 

தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படாதது வேதனை அளிக்கிறது - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

-----

சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி:

புதிய அறிவிப்பாணை வெளியிட்டு சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி.

-----

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.766 உயர்ந்தது.

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.37,864க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் விலை 97 ரூபாய் உயர்ந்து ரூ.4733க்கு விற்பனை.

-----

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

-----

மறைந்த கால்பந்தாட்ட ஜாம்பவான்  டியாகோ மரடோனாவுக்கு இந்தியாவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவித்துள்ளார்.

-----

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு. 

கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு.

-----

வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் வரும் 21ஆம் தேதியன்று மிக நெருக்கமாக வரும் என பிர்லா கோளரங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு 398 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ளதாகவும், இதன் பின்னர் 2080ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி மீண்டும் வியாழன் - சனி கிரகங்கள் அருகருகே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

-----

Monday, December 7, 2020

Today News செய்திகள் 07.12.2020 | TPC

Today News 07.12.2020 | TPC


நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி துவக்குகிறார். 



அதற்காக நேற்று பெங்களூரில் வசிக்கும் அண்ணன் சத்யநாராயணாவிடம் ஆசி பெற்றார்.

-----

சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் அடுத்தடுத்து 19 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்!

-----

தூர்தர்ஷன் சேனலில் முன்பு வெளியான மகாபாரதம் தொடரில் திருதராஷ்டிரனாக நடித்தவர் ரவி பட்வர்தன். வரவேற்பை பெற்ற இந்தி, மராத்தி சினிமாக்களில் நடித்து வந்த இவர், சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 



மஹாராஷ்டிராவில் தானேயில் வசித்து வந்த அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார். அவரது இறப்புக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் இரங்கல்.

-----

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பயணம்:

கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் முதலமைச்சர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார்.

கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்ட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.

-----

சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம்.

ஆணையம் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

-----

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

-----

சினிமாதுறையினருக்கான விருது வழங்கும் விழா, அடுத்த மாதம் நடத்த திட்டம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

-----

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமக்கு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பி வழங்கினார் பஞ்சாப் கவிஞர்  சுர்ஜித் பாட்டர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு.

-----

பின்னணிப் பாடகி Indian Playback Singer எல். ஆர். ஈஸ்வரிக்கு இன்னிக்கு பர்த் டே – Happy Birthday to LR Eshwari.

-----

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி    அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதனால், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் டெல்டா மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

-----

வருகிறது 5 புயல்கள்:

டிசம்பர் 8 ஆம் தேதி - தாக்டே

டிசம்பர் 17 ஆம் தேதி - யாஸ்

டிசம்பர் 24 ஆம் தேதி - குலாப்

ஜனவரி 01 ஆம் தேதி - ஷாஹீன்

ஜனவரி 8 ஆம் தேதி  - ஜவாட்

தமிழ்நாடு ஒரு புயல் மாநிலமாக உருவாகிறது.

-----

பிறமாநிலங்களில் காவல்துறைனரின் ஊதியம், தமிழக போலீஸ் ஊதியம் குறித்த தகவலை அளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.

-----

வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும்; தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

கல்லூரியின் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும்.

கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம்- அரசாணை.

மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

-----

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக நில அபகரிப்பு தடை சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை.

-----

நாளை முதல் டிச.13ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.ஏ.தேர்வு ஒத்திவைப்பு!

-----

சென்னை - சேலம் 8 வழி சாலை வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது.

-----

தமிழக அரசு: அரசு, தனியார் பேருந்துகளில் 100% இருக்கையில் பயணிக்க அனுமதி.

-----

Sunday, December 6, 2020

Today News செய்திகள் 06.12.2020 | TPC

Today News 06.12.2020 | TPC

அம்பேத்கர் நினைவு தினம் இன்று.



நம் தேசத்திற்காக அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்: பிரதமர் மோடி.

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அம்பேத்கரின் பங்களிப்பை இன்று நாம் நினைவில் கொள்வோம்: ராகுல் காந்தி.

சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர்.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தோடும், சமநிலையோடும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தியவர். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அளப்பரிய பணிகளை எந்நாளும் நினைவுகூர்ந்து போற்றிடுவோம்  - டிடிவி தினகரன்

-----

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதிகாலை முதல் கனமழை.

நெல்லை, தென்காசியில் விடிய, விடிய மழை. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு. தூத்துக்குடியில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

-----

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், ரெயில் நிலையங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னை ரெயில்வே காவல் மண்டலத்துக்குட்பட்ட ரெயில் நிலையங்களில் 900 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.

-----

அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதை எளிதாக்குமாறு மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-----

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

-----

போலி டாக்டர்கள் கொரோனா கிருமியை விட ஆபத்தானவர்கள் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

-----

தமிழகத்தில் 1800 க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்அறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அவர்களது வாரிசுகள் ஆகியோரது உதவியாளரும் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து தெரிவித்துள்ளார்.

-----

சிட்னியில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களம் காணுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.40-க்கு இப்போட்டி தொடங்குகிறது.

-----

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.86.25க்கு விற்பனை. ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.78.97க்கு விற்பனை.

-----

டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள திக்ரியில்  விவசாயிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.

--

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்.

--

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு.

--

வரும் 8 தேதி தேசிய அளவில் விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டத்தில் மதிமுக பங்கேற்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

--

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இன்று பிற்பகலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

திட்டமிட்டபடி 8-ம் தேதி பந்த் நடக்கும் என விவசாயிகள் அறிவிப்பு

-----

விவசாயிகளுக்கு என்றும் தி.மு.க. துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் உள்ளது பாஜக அரசு என அவர் தெரிவித்துள்ளார்.

-----

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் 1000 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றம் செய்யப்படுகிறது.

-----

மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது:- இந்திய வானிலை ஆய்வு மையம்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது புரெவி.

தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

-----

சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்.

சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவங்கள் மூலம் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க திட்டம்.

-----

டிசம்பர் 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதாக தகவல்.

-----

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 2021 புத்தாண்டில் வெளியாக உள்ளதாக தகவல்.

-----

Today News செய்திகள் 05.12.2020 | TPC

Today News 05.12.2020 | TPC

இன்று ஜெயலலிதா நான்காம் ஆண்டு நினைவு தினம்.


லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களை கம்பீரமான இந்த கணீர்க் குரலால் தன்வயப்படுத்தியவர்தான் ஜெயலலிதா.

-----

பாக் ஜலசந்தியில் தீவிரமடையும் தாழ்வு மண்டலம்.

டெல்டா உள்ளிட்ட கடலோரம் அதிக மழை பெய்யும்.

டிசம்பர் 5 இரவு கரைகடந்து டிசம்பர் 6 முழுவதும் 

தமிழகம் எங்கும் அதிக மழை.

-----

விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையில் இருந்து 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

-----

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான வால்ட்டிஸ்னி பிறந்த தினம் இன்று 5th December.

-----

இன்று விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிக்கையாளர், தமிழ் எழுத்தாளர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள்.

-----

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் - டிசம்பர் 5.

-----

கன்னிமாரா பொது நூலகம்

முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவராவார். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமா காட்சியளிக்குது இந்த நூலகம்.

1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

-----

உலக மண் தினம்

உலகின் இயற்கைச் சு ழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

-----

சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து 86.00 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து 78.69 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

பழனி கொடைக்கானல் ரோடு சவரிகாடு பகுதியில் கடும் நிலச்சரிவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

-----

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

-----

உலக தன்னார்வலர் தினமின்று  (International Volunteer Day).

இந்நாள் உள்ளூரிலும், சரவதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான இலக்குகளை அடைவதற்கு தன்னார்வப் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது.

-----

சபரிமலையில் 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

-----

கொரோனாவுக்கு உலக அளவில் 1,523,348 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.23 லட்சத்தை தாண்டியது. 

பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,523,348 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் 66,194,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,782,216 பேர் குணமடைந்துள்ளனர்.

-----

வாசிப்பாளர்களை குவித்து விருது பெற்ற குடியாத்தம் நூலகம்..!

வாசிப்பாளர்கள் அருகி வரும் இந்த காலகட்டத்தில், ஒரே ஆண்டில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நூலக உறுப்பினராக்கி மாநில அளவிலான விருதைப் பெற்றுள்ளது குடியாத்தம் நூலகம்.

-----

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, மீதமுள்ள இரண்டு டீ20 போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

-----

தனிப்பெரும் கட்சியாக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ். வெற்றி

-----

தலைகவசம் இல்லையெனில் எரிபொருள் இல்லை - மேற்கு வங்க அரசு

தலைகவசம் இல்லையெனில் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என, மேற்கு வங்க அரசு அறிவித்து உள்ளது.

-----

பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல்.

-----

100 நாட்களுக்கு முகக்கவசம் (மாஸ்க்) அணியும் படி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

-----

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...