Wednesday, February 17, 2021

Today News செய்திகள் 17.02.2021 | TPC

Today News 17.02.2021 | TPC

12ம் வகுப்பு பொதுத்தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு.




தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு மே 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 3-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை +2 பொது தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1.    மே 3 – மொழித்தாள்.

2.    மே 5 – ஆங்கிலம்.

3.    மே 7 - கணினி அறிவியல்.

4.    மே 11 - இயற்பியல் தேர்வு.

5.    மே 17 – கணிதம்.

6.    மே 19 – உயிரியல்.

7.    மே 21 - வேதியியல் தேர்வு.

காலை 10 மணி முதல் 10.10 வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், 10.15 மணி வரை தேர்வர்கள் விவரங்கள் சரிபார்ப்பு.

தேர்வு சரியாக 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு நிறைவுபெறும்.

------

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பொதுத்தேர்வு அட்டவணையை தயாராக வைத்திருந்ததாக திடீர் தேர்வு அறிவிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன்  விளக்கமளித்துள்ளார். நூலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

------

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னை மணலியில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு உற்பத்தி மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்பு.

------

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நாளை ரயில் மறியல் போராட்டம்:

நாளை காலை12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என விவசாயிகள் அமைப்பு அறிவிப்பு.

போராட்ட அறிவிப்பு காரணமாக, பஞ்சாப், அரியானா, .பி., மேற்கு வங்கத்தில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு - ரயில்வே.

------

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்கிறார். கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பொறுப்பு ஆளுநராகிறார்.

--

கோவையில் குடியேறுகிறார் கிரண்பேடி.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரண்பேடி IPS கோவை மாவட்டத்தில் குடியேற இருப்பதாக தெரிகிறது!

கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் மிக பிரம்மாண்டமான மாளிகை ஒன்று கிரண்பேடிக்காக கட்டப்பட்டு வருவதாக பி.ஜே.பி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

------

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் ஜெஃப் பெசாஸ் முதலிடம்

ஆன்லைன் புக் ஸ்டோராக 1995ல் அமேசானைத் தொடங்கினார் பெசாஸ். இப்போது 1.7 ட்ரில்லியன் டாலர்கள் பெறுமான -காமர்ஸ் ஜெயண்ட்டாக உருவெடுத்துள்ளது அமேசான்.

191.2 பில்லியன் டாலர்கள் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் மீண்டும் உலகின் நம்பர் பணக்காரர் என்ற இடத்துக்குச் சென்றார்.

டெஸ்லா பங்குகள் பங்குச்சந்தையில் செவ்வாயன்று 2.4% குறைந்ததையடுத்து எலோன் மஸ்க்கின் சொத்து 4.6 பில்லியன் டாலர்கள் குறைந்தது. இதனையடுத்து 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

------

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி புதுச்சேரி வந்தடைந்தார். புதுச்சேரி வந்த ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

--

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் - காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பேச்சு:

சிறிய மாநிலமாக இருந்தாலும் புதுச்சேரி முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம்.

இந்தியாவில் உள்ள பல மொழிகள், கலாச்சாரங்கள் நாட்டை வலிமையாக வைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி புதுச்சேரி மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, மாநில உரிமையை பாதுகாக்கும்.

புதுச்சேரி, நாட்டை வலிமையாக்குகிற ஒரு பிரதேசம் - காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி.

------

தமிழக அரசு, பழைய கட்டிடங்களை புதுப்பித்து மினி கிளினிக் என திறந்து வருகிறது.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் சரியாக வரைமுறை செய்யப்படாததால், ஆம்புலன்ஸ் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் இதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படும்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அமைத்து கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

ரூ 120 கோடி செலவில் சர்வதேச விமான நிலையம் அமைத்தது திமுக.

மதுரையில் பல்வேறு மேம்பாலங்களை அமைத்தது திமுக - ஸ்டாலின்.

------

கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தாலும் கொஞ்சூண்டு டிக்கெட்டுகளே சேல்ஸ் ஆகி வருகின்றன. அதிலும் இரவுக் காட்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய படங்கள் போதிய வசூல் இல்லாமல் திணறுகிறது.

------

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.22-ம் தேதி திமுக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

------

கிறிஸ்தவர்களின் தவக்காலமான சாம்பல் புதன் இன்று சிறப்பு பிராத்தனையுடன் துவங்கியது.

------

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு திமுக தலைவர் மு..ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டிற்காகவும், தெலுங்கானா மாநிலத்திற்காகவும் மேலும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்யவேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளர்.

------

வரலாற்றில் முதல் முறையாக, ராஜஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100/- தாண்டியது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கநகர் நகரில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13/-க்கு விற்பனை.

------

கவிஞர் வைரமுத்து பெட்ரோல் விலை உயர்வு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Source: tweeter

அதில், என் பாட்டு வரியை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள். ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு; பெட்ரோல் இருந்தால் வருகிறேன்என குறிப்பிட்டுள்ளார்.

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,416/-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.10/-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

------


No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...