Today News 11.02.2021 | TPC
நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது குடும்பத்தினருடன் பாஜகவில் இணைந்தார்.
சென்னை தியாகராயநகரில், பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி. டி. ரவி, முன்னிலையில், கட்சியில் இணைந்தார்.
இதேபோல் இன்று குன்னூர் தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியனும், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
------
சி.பி.எஸ்.இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல்-1 முதல் பள்ளிகளை தொடங்கலாம்.
மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி.
------
புதிய வேளாண் சட்டங்களால் மண்டிகள் ஒழிந்துபோகும் என்றும், இன்றியமையாப் பொருட்கள் சட்டத்துக்கு முடிவு கட்டப்படும்
- காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
------
நாளை (12.02.2021 Friday) ரிலீஸாக இருக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு சென்சாரில் U/A
கிடைச்சிருக்கு.
------
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த
நடிகர் சூர்யா குணமடைந்து வீடு திரும்பினார்.
“அண்ணன் சூர்யா கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
நாங்கள் அனைவரும் சிறிது நாட்கள் வீட்டிலேயே எங்களை தனிமைபடுத்திக் கொண்டுள்ளோம்.
பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.”
நடிகர் கார்த்தி!
------
ஏலே திரைப்படம் வரும் 28-ம் தேதி நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
புதிய விதிகளால் படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை.
OTT கடிதம் கொடுத்தால்தான் படத்தை திரையிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருந்த நிலையில் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
------
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு, பள்ளித் தேர்வுகள், வெயில் ஆகியவற்றை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்.
வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.
------
சென்னை லலிதா ஜுவல்லரி அலுவலகத்தில் இருந்து 90 கிராம் தங்கக் கட்டியைத் திருடிச் சென்ற 3 ஊழியர்கள் கைது.
3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தகவல்
------
மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன்:
தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் முழு
அதிகாரம் கமல்ஹாசனுக்குதான் உள்ளது செயல்படுவார் - பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு
கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
“நான் வாரிசு அரசியல் செய்ய மாட்டேன். நேர்மையான கட்சியாக ம.நீ.ம இருக்க வேண்டும்.
என் இரு மகள்களும் பொதுக்குழுவிற்கு வருவதாக கூறினார்கள். ஆனால் வாரிசு அரசியலாக மாறிவிட கூடாது என்று நான் மறுத்துவிட்டேன்.”
கமல்ஹாசன்.
------
கொரோனா நெருப்பு இன்னும் அணையாத நிலையில், விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா?
மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே அரசின் பொறுப்பு - திமுக தலைவர் ஸ்டாலின்.
------
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.36,048/-க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,506/-க்கு விற்பனை.
------
லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு ‘இன்ச்’ நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டோம்.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு - மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
------
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் நடராஜன் சேர்க்கப்படலாம் என தகவல் தெரிய வந்துள்ளது. பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஏற்று விஜய் ஹசாரே தொடரில் இருந்து நடராஜனை தமிழக கிரிக்கெட் சங்கம் விடுவித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
------
No comments:
Post a Comment