Today News 08.02.2021 | TPC
சாமோலியில் பனிப்பாறை வெடித்ததைத் தொடர்ந்து உத்தர்கண்ட்
முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேரிடர் நிவாரண நடவடிக்கை குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை
நடத்துகிறார்.
நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர்
மறுமொழி நிதியிலிருந்து ரூ .20 கோடியை உத்திரகாண்ட் முதல்வர் விடுத்துள்ளார்.
--
உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து உண்டான வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள துயரச்செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. - முதல்வர் பழனிசாமி.
------
ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படையில் சேர்க்க நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆன செலவு 41.32 லட்ச ரூபாய். இதில் ஜி.எஸ்.டி 9.18 லட்ச ரூபாய்.
------
தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 08.01.2021.
464 புதுத் தொற்றாளிகள்.
இதில் 143 சென்னைவாசிகள்.
51,448 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.
------
அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்ததாக மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
------
துபாய், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து 1090 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
------
ஆந்திராவில் லஞ்ச புகாரில் ஜூனியர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் புகார்தாரரிடமிருந்து ரூ .32,000 லஞ்சமாக பெற்றபோது ராணுவ பொறியாளர் சேவைகள் ஜூனியர் இன்ஜினியர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
------
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி சசிகலா தமிழகம்
வருகை:
1. சசிகலாவின் வாகனம் சென்னையை நோக்கி வருவதால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி சசிகலா தமிழகம் வருவதால் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றனர்.
2. கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் சசிகலா வாகனத்துடன் ஆதரவாளர்கள் வாகனங்களில் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளனர். வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3. ஒற்றுமையோடு இனைந்து செயல்பட வேண்டும் என வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்கு நான் என்றும் அடிமை, அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டேன் என கூறினார். எம்.ஜி.ஆர். வழிவந்த ஒருதாய் வயிற்று பிள்ளைகள் ஒற்றுமையாக ஓரணியிர் திரள வேண்டும் என கூறினார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் பேட்டியளித்தார்.
4. பூந்தமல்லியில் சசிகலாவை வரவேற்க புறா அதிமுக கொடி வடிவில் வரையப்பட்டு பறக்கவிடப்பட இருக்கிறது.
5. பெங்களூரில் இருந்து சென்னைக்கு 334கிமீ 8மணி நேர பயணத்தில்
131கிமீ கடந்துள்ளது.! சென்னை வந்தடைய இன்னும் 203கி.மீ கடக்க வேண்டும்.
6. பெங்களுரிலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் சசிகலா தமிழகம் வந்து கொண்டிருக்கும் நிகழ்வை ஜெயா தொலைக்காட்சி காலை முதலே நேரலை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பை அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுத்தியுள்ளது.
7. சசிகலா-வுக்காக கிரேன் மூலம் பழ மாலை.
8. வேலூரில் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்க்கு விரைந்து வழிவிட்ட
சசிகலா தொண்டர்கள். வேலூர் வந்தடைந்தார் சசிகலா.
ஆதரவாளர்கள் தொடர்ந்து உற்சாக வரவேற்பு.
9. வேலூரில்
இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா
10. சசிகலா இன்று சென்னை தி நகர் இல்லத்திற்கு வருவதற்கு இரவு 9 மணி ஆகிவிடும்.
------
No comments:
Post a Comment