Today News 12.01.2021 | TPC
ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!
சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில்ரூ.50.80 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
நினைவிடத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றார்.
நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் பணிகளை பார்வையிட்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் வந்தனர்.
------
விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன்
விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியது.
------
கேரளத்தில் மேலும் 5,507 பேருக்கு கரோனா:
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன்வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 5,507பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 8,19,766ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 64,556 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.
------
கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: முதலில் வெளியாகிறது விஜய் நடித்த மாஸ்டர் படம்
கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன.
முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கேரளத்தில் கடந்த பத்து மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாளை முதல் கேரளத்தில் திரையரங்குகள் மீண்டும் இயங்கவுள்ளன.
------
மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை ஆகிய மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.
------
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இல்லத்தை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகை
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இல்லத்தை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை தினக்கூலி ஊழியர்களாக மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
------
சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ரஜினி ஆதரவு அளிக்க மாட்டார்: தமிழருவி மணியன் கருத்து.
------
பறவைக் காய்ச்சலால் நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்: ஒரே வாரத்தில் விலை 90 காசுகள் குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை.
நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மீதமுள்ள 2 கோடி முட்டைகள் மாநிலம் முழுவதற்கும், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
------
மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
------
இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம்
வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படும்!
-சீரம் நிறுவனம் தகவல்
------
வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
------
அரியலூர் மாவட்டதில் கடந்த இரண்டு நாளாக இடைவிடாத தொடர் மழை பதிவாகிய வண்ணம் உள்ளது.
தற்போது அரியலூர் மாவட்டதில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடர் மழையால் கரும்பு அறுவடை பணிகள் நடைபெறாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை.
------
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக புகார்.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை நடவடிக்கை.
------
பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை.
ஏற்கனவே காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 நாட்களுக்கு தடை விதிப்பு.
------