Wednesday, February 10, 2021

Today News செய்திகள் 10.02.2021 | TPC

Today News 10.02.2021 | TPC

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் அதிகமாக பாலியல் காட்சிகள், வன்முறைகள், தகாத சொற்கள் பேசுவது போன்றவைக்கு கட்டுபாடுகள் இல்லாததால், அவை பார்ப்பவர்களின் மனதை புண்படுத்தலாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டது



இதனால் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளை கண்காணிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ஓடிடியில் திரைப்படம் மற்றும் தொடர்கள் ரிலீஸ் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராக இருப்பதாகவும், விரைவில் அவற்றை வெளியிட இருப்பதாகவும் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவிச்சிருக்கார்

------

தை அமாவாசை! (11.02.2021)

தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

 

சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

--

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

------

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார்.

அப்போது அவருக்கு தமிழக எல்லையிலும் தமிழகம் முழுவதிலும் சென்னையிலும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி சசிகலாவுக்கு நோட்டீஸ் கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

------

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படுக்கை விரிப்புகளுக்குள் மறைத்து பார்சல் கட்டி கடத்த முயன்ற 500 கிலோ செம்மரக்கட்டைகள் சிக்கின. சிங்கப்பூர் செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்ற இருந்த போது சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கைப்பற்றினர்.

------

எஸ்.சி, எஸ்.டி தனித்தொகுதிகள் போல் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனி தொகுதி ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பாக நிறுவன தலைவர் செந்தில்ராஜா மனு அளித்துள்ளார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக மாற்றுத் திறனாளிகளை நிறுத்த ஒரே சின்னம் ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

------

சத்தியமங்கலம்மைசூர் சாலையில் தமிழக எல்லையில் போராட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜை கர்நாடக போலீஸ் கைது செய்தது. கும்பாரகுண்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவாலிய கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தாளவாடி, உதகை, ஒசூர் ஆகிய பகுதிகளை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார்.

------

தமிழகத்தில் யானைகள் இறப்பது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

யானைகள் மரணத்தில் வெளி மாநிலத்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. வெளிமாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

------

இந்தியாசீனா 9-ம் கட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பங்கோங் சோ ஏரி கரையில் உள்ள படைகளை இரு நாடுகளும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

------

வேளாண் சட்டங்களை ஆதரித்து பிரதமர் பேசியதற்கு மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சியினரின் முழக்கத்தால் சிறிது நேரம் பதிலுரையை பிரதமர் மோடி நிறுத்தினார். வேளாண் சட்டங்கள் குறித்து பொய் கூறுபவர்கள் தனது உரைக்கு இடையூறு செய்வதாக மோடி குற்றம் சாட்டினார்.

------

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான (62 ஏக்கர் நிலத்தை) தமிழக அரசு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.

------

வித்யாபாலன் நடித்துள்ள இந்தி குறும்படம், நட்கட். ஆண், பெண் சமத்துவம் பற்றி பேசும் இந்த குறும்படத்தை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைத்தனர். சிறந்த வெளிநாட்டு குறும்படங்களுக்கான போட்டியில் இந்த படம் இடம்பெற்றுள்ளது.

------

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக திரட்டப்படும் நிதி ரூ.600 கோடியை தாண்டியுள்ளது. கோவில் கட்டுமான பணியை மேற்கொள்ளும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா டிரஸ்ட் ஜனவரி.15-ம் தேதி முதல் நன்கொடை திரட்டி வருகிறது. வசூலாகும் நன்கொடையில் தவறுகள் நிகழாமல் இருக்க, பட்டயக் கணக்காளர் குழு தலைமையில் கண்காணிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது.

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120குறைந்து ரூ.36,176/- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.4,522/-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.40/-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

Monday, February 8, 2021

Today News செய்திகள் 08.02.2021 | TPC

 Today News 08.02.2021 | TPC

சாமோலியில் பனிப்பாறை வெடித்ததைத் தொடர்ந்து உத்தர்கண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேரிடர் நிவாரண நடவடிக்கை குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.


 

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் மறுமொழி நிதியிலிருந்து ரூ .20 கோடியை உத்திரகாண்ட் முதல்வர் விடுத்துள்ளார்.

--


உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து உண்டான வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள துயரச்செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. - முதல்வர் பழனிசாமி.

------


ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படையில் சேர்க்க நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆன செலவு 41.32 லட்ச ரூபாய்.  இதில் ஜி.எஸ்.டி 9.18 லட்ச ரூபாய்.

------


தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 08.01.2021.

464 புதுத் தொற்றாளிகள்.

இதில் 143 சென்னைவாசிகள்.

51,448 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------


அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்ததாக மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

------


துபாய், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து 1090 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

------


ஆந்திராவில் லஞ்ச புகாரில் ஜூனியர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் புகார்தாரரிடமிருந்து ரூ .32,000 லஞ்சமாக பெற்றபோது ராணுவ பொறியாளர் சேவைகள் ஜூனியர் இன்ஜினியர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

------


சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி சசிகலா தமிழகம் வருகை:

1.    சசிகலாவின் வாகனம் சென்னையை நோக்கி வருவதால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி சசிகலா தமிழகம் வருவதால் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றனர்.

2.      கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் சசிகலா வாகனத்துடன் ஆதரவாளர்கள் வாகனங்களில் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளனர். வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3.      ஒற்றுமையோடு இனைந்து செயல்பட வேண்டும் என வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்கு நான் என்றும் அடிமை, அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டேன் என கூறினார். எம்.ஜி.ஆர். வழிவந்த ஒருதாய் வயிற்று பிள்ளைகள் ஒற்றுமையாக ஓரணியிர் திரள வேண்டும் என கூறினார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் பேட்டியளித்தார்.

4.      பூந்தமல்லியில் சசிகலாவை வரவேற்க புறா அதிமுக கொடி வடிவில் வரையப்பட்டு பறக்கவிடப்பட இருக்கிறது.

5.      பெங்களூரில் இருந்து சென்னைக்கு 334கிமீ 8மணி நேர பயணத்தில்  131கிமீ கடந்துள்ளது.! சென்னை வந்தடைய இன்னும் 203கி.மீ கடக்க வேண்டும்.

6.      பெங்களுரிலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் சசிகலா தமிழகம் வந்து கொண்டிருக்கும் நிகழ்வை ஜெயா தொலைக்காட்சி காலை முதலே நேரலை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பை அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுத்தியுள்ளது.

7.      சசிகலா-வுக்காக கிரேன் மூலம் பழ மாலை.

8.      வேலூரில் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்க்கு விரைந்து வழிவிட்ட

சசிகலா தொண்டர்கள். வேலூர் வந்தடைந்தார் சசிகலா. ஆதரவாளர்கள் தொடர்ந்து உற்சாக வரவேற்பு.

9.      வேலூரில்  இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா

10.  சசிகலா இன்று சென்னை தி நகர் இல்லத்திற்கு வருவதற்கு இரவு 9 மணி ஆகிவிடும்.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...