Thursday, March 11, 2021

Today News செய்திகள் 11.03.2021 | TPC

Today News 11.03.2021 | TPC

இன்று மகாசிவராத்திரி! சிவனின் அருளை பெற்றுதரும்!

மகாசிவராத்திரி... நான்கு ஜாம பூஜைகள்...!!



வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகாசிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது. மகாசிவராத்திரி இன்று அனைத்து சிவன் கோவில்களும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

------

நீலகிரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

------

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.எம். சுகுமார் அவர்களை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல்.

------

தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக 20 இடங்களில் வருமானவரித்துறை சோதனை. சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரையில் சோதனை நடந்துவருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்.

------

லஞ்சம் பெற்றும் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார் அளித்த பெண்ணை கைது செய்த காவல் ஆய்வாளருக்கு அபராதம்.

உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எழிலரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது மாநில மனித உரிமைகள் ஆணையம்.

------

என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.- பிரதமர் மோடி



------

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

------

நெல்லை தொகுதியை யாதவர் சமுதாயப் பிரமுகர்க்கு ஒதுக்க கோரி பாளை. தெற்கு பஜாரில் உள்ள அழகுமுத்து கோன் சிலை முன்பு காலை .10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

------

சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 12 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

------

பள்ளிப்பட்டு: சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதன்படி, பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் வக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட வி.வி.பேட் மிஷின் மூலம் வாக்குப் பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

------

ராணிப்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.7.01 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோழிக்கறி வியாபாரம் செய்து வரும் ரபீக் அகமது என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

------

அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

------

அர்ஜென்டினா நாட்டின் சுபுட் மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

------

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருப்பராய்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன சுவாமி சித்பவானந்தர் இயற்றிய ஸ்ரீமத் பகவத் கீதை ஆங்கில விளக்க உரை -புத்தகத்தை, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

------

துபாயில் இருந்து வந்த பயணிகளிடமிருந்து சுங்கச் சட்டத்தின் கீழ் ரூ .62.35 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம்;  6 தங்க பேஸ்ட் பைகளும் மீட்கப்பட்டன.

------

கொரோனா தொற்று நடவடிக்கைகளில்பொதுமக்கள்முகக்கவசம்அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெங்கு கொசுஉற்பத்தியாகும்இடங்களைக் கண்டறிந்துபுகை மருந்துஅடிக்க வேண்டும்என்று ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்.

------

Thursday, March 4, 2021

Today News செய்திகள் 04.03.2021 | TPC

Today News 04.03.2021 | TPC

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும்.


தகவல்
சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்; வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி.

------

தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்ய தடைவிதிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கடிதம்.

------

திமுகவுடனான 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்பது, ஏற்கனவே பேசிய அதே நிலையில்தான் இருக்கிறது - மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா.

------

பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. யை சஸ்பெண்ட் செய்யக்கோரி 10 பெண் .பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்.

------

நாம் தமிழர் கட்சியில் இருந்து சாட்டை துரைமுருகன் நீக்கப்பட்டார்.

------

கிருஷ்ணகிரி அருகே கூட்டுறவு சொசைட்டியின் மூலம் பயிர் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு.

முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளது வெற்று அறிக்கை என விவசாயிகள் குற்றச்சாட்டு.

------

திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக தொகுதி பங்கீடு குழுவினருடன் முத்தரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை.

2வது கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.

திமுகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்து - முத்தரசன்.

------

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக - மதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை.

அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பில் மல்லை சத்யா, செந்திலதிபன், சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு.

திமுகவுடனான 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்பது, ஏற்கனவே பேசிய அதே நிலையில்தான் இருக்கிறது - மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா.

------

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தார், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்பமனுவை வழங்கினார் விஜய பிரபாகரன்.

தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் விருப்பமனு அளித்ததாக பேட்டி.

------

ஆசிரியர்களுக்கு மார்ச் 18 ல் தேர்தல் வகுப்பு தொடக்கம். 4 நாட்கள் நடக்கின்றன.

------

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு திமுக மீண்டும் அழைப்பு.

ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் 3-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு.

திமுக கூட்டணியில் நீடிக்கலாமா என மாவட்ட தலைவர்கள் இடம் காங்கிரஸ் கருத்து கேட்டு வரும் நிலையில் திமுக அழைப்பு.

------

அகமதாபாத் டெஸ்ட் - 205 ரன்னுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி.

இந்தியாவின் அக்ஸர் படேல் 4, அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.

------

தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் ~ தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல்.

------

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு-சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தலாம் - நீதிபதி சத்தியநாராயணன்.

வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை - நீதிபதி ஹேமலதா.

3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை.

ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுதாரர் புகார்.

ராஜேந்திர பாலாஜி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை - லஞ்ச ஒழிப்பு துறை.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...