Friday, February 5, 2021

Today News செய்திகள் 05.02.2021 | TPC

Today News 05.02.2021 | TPC 

16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி:



பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதி ஆதாரம் வரும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

------

கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கும்.

விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்ற முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு.

------

200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், 234 தொகுதியில் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை - மு..ஸ்டாலின் பேட்டி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என மு..ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

------

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பதற்கான மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

------

கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும்.

மேற்குவங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

------

சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்.

ஜூன் மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

------

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவு அஞ்சலில் அனுப்பப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

------

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 05.02.2021.

489 புதுத் தொற்றாளிகள்.

இதில் 158 பேர் சென்னைவாசிகள்.

52,487 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------

ஆன்லைன் மூலம் ரூ.250 செலுத்தினால் பஞ்சாமிர்தத்துடன் கூடிய பழனி முருகன் கோவில் பிரசாதம் நம் இல்லம் தேடி வரும்.

------

ஜல்லிக்கட்டு தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

விரும்பத்தகாத நிகழ்வுகளான, காவல் துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்த பிற வழக்குகள் வாபஸ்.

------

கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு கடைசி வாய்ப்பில் யு.பி.எஸ்.சி தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

------

அணையப் போகும் அரசாக அதிமுக அரசு உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக என்ன சொன்னதோ, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே முதல்வர் செய்து வருகிறார்.

------

அமேசான் ப்ரைம் வீடியோ மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுவதுடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியையும் அறிவிக்கிறது.

முதல் போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது.

------

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் திருக்கொளஞ்சியப்பன் அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி ஆகியன வருகின்றன.

------

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை சேத்துப்பட்டில் நாளை மாலை நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக  எடப்பாடி மற்றும் பி எஸ் கலந்து கொள்கின்றனர்.

------

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, பெங்களூரில் தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். சசிகலா வருகின்ற எட்டாம் தேதி சென்னை வரவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை வரும் சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

------

வரும் 8ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகளுக்கு இனி வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

------

Tuesday, February 2, 2021

Today News செய்திகள் 02.02.2021 | TPC

Today News 02.02.2021 | TPC

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை cbse.gov.in தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு மே 4 முதல் தேர்வுகள் ஆரம்பம்.



ஜூன் 7ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

------

சி.பி.எஸ்.இ 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே 4-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை காலை, மதியம் என இரு பிரிவுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை நடைபெறும் தேர்வு காலை 10.30 மணி முதல் 1.30 வரை நடைபெறுகிறது. மதியம் நடைபெறும் தேர்வு 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 4-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணி முதல் 1.30 வரை நடைபெறுகிறது

சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

04-05-2021 காலை   ஆங்கிலம்

15-05-2021  மதியம்    தமிழ்

17-05-2021  காலை    அக்கவுண்டன்சி

18-05-2021  காலை    வேதியல்

 24-05-2021  காலை   உயிரியல்

25-05-2021  காலை பொருளியல்

31-05-2021 காலை இந்தி

01-06-2021  காலை கணிதம்

02-06-2021 காலை புவியியல்

10-06-2021 காலை வரலாறு

11-06-2021 காலை வேளாண்

சிபிஎஸ்இ 10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

06-05-2021  காலை ஆங்கிலம்

10-05-2021 காலை  இந்தி

11-05-2021 காலை  தமிழ்

15-05-2021 காலை  அறிவியல்

21-05-2021 காலை  கணிதம்

27-05-2021 காலை சமூக அறிவியல்.

------

அரசு அலுவலகங்கள் இனி பசு சிறுநீர் மூலம் செய்யப்பட்ட பினாயிலால் மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும்!” - .பி. அரசு

------

ஆண், பெண் திருமண வயதை ஒரே மாதிரி நிர்ணயிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பெண்களுக்கு திருமண வயது 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் மாறுபடுவது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------

கோவையில் வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்பு.

------

தமிழகத்தில் பிப்.5 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு.

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கப்பட்ட கூட்டத்தொடர் மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

------

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுரை.

மியன்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

------

ஜன 27ம் தேதி திறக்கப்பட்ட ஜெயலலிதா சாமதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது.

------

வரும் தேர்தலில், அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கும்.

- சரத்குமார்

------

'ஜகமே தந்திரம்' கிட்டத்தட்ட  ஒரு வருசத்துக்கும் மேலா ரிலீஸுக்குக்  வெயிட்டிங்-கில் இருக்குது.. 'Y Not Stuidos' நிறுவனத்தின் சஷிகாந்த், ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிச்சிருக்கும் படமிது.

------

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு.

வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25  லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

------

ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் கொரணோ அச்சம் காரணமாக 11 மாதங்களாக 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள்  நீராட விதிக்கப்பட்ட தடை இன்று விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

------

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம்.

அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண் 1100.

------

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.88.82 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.81.71 க்கு விற்பனை.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...